26 Mar 2025

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மக்களின் மனங்களைக் கொலை செய்கின்றார் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

SHARE

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மக்களின் மனங்களைக் கொலை செய்கின்றார் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்கள் அடிக்கடி களவு, கொலை, கப்பம், என்று பேசிக் கொண்டிருக்கின்றார். உண்மையில்; நீங்கள்தான் மக்களின் மனங்களை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள். மக்களிடம் வாக்குகளைப் பெற்று மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்க முடியாமல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களின் அபிலாசைகளை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள். 

என தமிழ் ம்ககள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை(25.03.2025) மட்டக்களப்பிலுள்ள அவரனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் 

அனைத்து தேர்தலிலும் இலங்கை தமிழர் கட்சி தோல்வியை தழுவும் என்கின்ற பயத்தில் அக்கட்சி ஊடக அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அந்த அறிக்கையைப் பார்க்கின்ற போது மிக மோசமாக நீதிமன்ற தீர்ப்பினை அதிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பை தீரிவுபடுத்தி பிழையாக வழிநடத்துகின்ற செயற்பாடாக உணர முடிகின்றது. 

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரணதண்டனை என மட்டக்களப்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். உண்மையில் அதை மிகவன்மையாக கண்டிக்கின்றோம். அது மாத்திரமல்ல எமது கட்சியின் சட்ட ஆலோசகர்கள் நீதிமன்ற கட்டளையினை கோரி சட்டத்தரணி ஊடாக விண்ணப்பித்திருக்கின்றோம். அந்த நீதிமன்ற தீர்ப்பு வந்த பிற்பாடு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்கள் மிக மோசமாக நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து இழிவு படுத்தி பொய்யான கருத்தை வெளியிட்டது தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருக்கின்றோம். 

போராட்ட காலத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றன என நினைக்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களும் மட்டக்களப்பிலே பிறந்தவர் மட்டக்களப்பிலே வாழ்ந்தவர். போராட்ட காலங்களில் நடந்த சம்பவங்களை ஆதரவாக வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றபோது அதனை கவனமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மீதும் அல்லது தலைவர் சந்திரகாந்தன் மீதும் கைகளை காட்டி அரசியல் ரீதியாக செயல்பாடுகளை முன்னெடுப்பது அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

பா.உ. சிறிநேசன் அவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது என்கின்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கின்றது. அவர் எந்த போர்க்களத்துக்கு சென்று இருக்கின்றார். அல்லது ஏதாவது ஒரு போராட்டத்தில் சென்றிருக்கின்றாரா? அல்லது விடுதலைப் புலிகளில் போராட்டத்தில் இருக்கின்றாரா? ஆனால் இன்று போராட்ட வீரன் போல் பேசிக்கொண்டு அலைகின்றார். போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளை விமர்சித்தவர், கற்பித்தவர், என்பதை மறந்துவிட்டீர்களா? ஆனால் கற்றவர்கள் மறந்து இருக்க முடியாது எவ்வாறு வசைபாடினார் போராட்டத்தைப் பற்றி  எங்களுக்கு தெரியும் ஆனால் இன்று போராட்டத்தை பற்றி பேசிக்கொண்டு அதில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். அதை மக்கள் நன்கு உணர்ந்து அவருக்கு வழங்குவார்கள்.கிழக்கு தமிழர் கூட்டமைப்பை விமர்சிக்கின்றார்.

நாங்கள் எந்த கட்சியுடன் கூட்டு வைக்க வேண்டும், யாரை கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும், எவ்வாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், என்று தீர்மானிக்கின்ற பொறுப்பு தொடக்க விடுதலைப் பற்றிய கட்சிக்கு வாக்களிக்கின்ற மக்களுக்கள் இருக்கின்றனர். அது சம்பந்தமாக பேசுகின்ற எந்த அருகதையும் அவர்களுக்கு இல்லை.

நீங்கள் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பொன்றை உருவாக்கியதை நான் நினைக்கிறேன் உங்களுக்கு தெரியாது. நீங்கள் அந்த வேளையில் தமிழர் கட்சி எதிராக செயல்பட்டிருந்தீர்கள் கௌரவ தலைவர் சிவச்சந்திரன் முதலமைச்சராக இருக்கின்றபோது முதலமைச்சரின் பின்னால் அவர் போன்ற ஒரு முதலமைச்சர் உலகத்தில் இல்லை என்று புகழாரம் சூட்டியவர். கட்சி எல்லாம் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கினீர்கள் அந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று சிதறிப்பை கிடக்கின்றது. கூட்டமைப்பு என்பதற்கு என்ன இலக்கணம் என்ன வரைவிலக்கணம் இருக்கின்றது என்று தெரியாத நீங்கள் இன்று கிழக்கு தமிழ் கூட்டமைப்பை பற்றி கிழக்கே பிரித்தது போன்று ஆவேசப்பட்டு பேசிக்கொண்டு தடுமாறுகின்றீர்கள்.

மிக மோசமாக தடுமாறி உரையாற்றி இருந்தீர்கள் உங்களது உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் அவர்களின் வாக்குகளால்தான் நீங்கள் நாடாளுமன்றம் சென்றீர்கள். என சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் அவர்கள் உங்களை வைத்துக்கொண்டே பேசி இருந்தார். நடத்த முடியாமல் கூட்டணிப்புக்குள் சிதைவுகளை ஏற்படுத்தி இன்று தமிழரசுக் கட்சியில் இருந்த அரியேந்திரன் அவர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றார். ஏனைய மூத்த சிரேஷ்ட உறுப்பினர்கள் உங்களையும் ஓரம் கட்டி விடுவார்கள் யார் மேட்டுக்குடி தலைமைத்துவம் என்பதற்காக அவர்களுக்காக நீங்கள் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு ஜால்ரா அடிக்கின்றீர்கள் தெரியவில்லை. மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை முதலில் தீர்த்துக் கொள்ளுங்கள். எவ்வாறு செயற்பட வேண்டும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பிள்ளையான் முதலமைச்சராக இருந்து நிர்வாகத்தை சிறப்பாக செயல்படுத்தி காட்டியவுடன் உங்களுக்கு தெரியும் மக்களுக்கு நன்றாக தெரியும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் பல ஒப்பந்தங்கள் கைச்சாற்றப்பட்டிருக்கிறன. அந்த அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்டீர்கள். முதலமைச்சரை யாருக்கு கொடுத்தீர்கள் என்று உங்களுக்கு தெரியும். ஆகவே இரண்டு மாகாண சபை தேர்தல் நடைபெற்றிருக்கின்றது. மாகாணம் தனி அலகாக செயற்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் கிழக்கே மையப்படுத்தி கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு அரணாக பாதுகாப்பான அரசியல் பலம் தேவை என்பதை உணர்ந்து தமிழ் மக்கள் விடுதலை கட்சி விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் இன்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று அனைத்து அரசியல் தலைவர்கள் ஒன்றாக சேர்த்து பயணிப்பதற்கு முன்னிக்கின்ற போது அதனை தடுப்பதற்காக இன்று வந்து வடக்கு கிழக்கு பிரிப்பு என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர். 

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மக்களுக்கு நிரந்தரமான தீர்வினை, தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதனை விமர்சிப்பதை விடுத்து உங்களது கட்சிக்குள் இருக்கிற பிரச்சனையை நீங்கள் சீர்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்யப் பாருங்கள். அடிக்கடி களவோ கொலை கப்பம் என்று பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் உண்மையில் மக்களை நீங்கள்தான் மக்களின் மனங்களை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள். மக்களிடம் வாக்குகளைப் பெற்று மக்களின் அபிலாசைகளை தீர்த்து வைக்க முடியாமல் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களை அபிலாசைகளை கொலை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

மக்களுக்கு தெரியாமல் வாக்குகளை திருடி உங்களது அரியாசனத்தை சூடாக்கிக் கொண்டு குடும்பங்கள் மிக கஷ்டப்பட்டு கொண்டு கிழக்கின் மக்களின் பரம்பரை தெரியாமல் பேசிக்கொண்டு எதிர்வரும் என்ற தேர்தலில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மக்கள் நிச்சயமாக இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பை ஆதரிப்பார்கள். எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களும் அதேபோன்று வியாழேந்திரன் அவர்களும் ஒன்றிணைந்து ஆரம்பித்திருக்கின்ற இந்த கிழக்கு தமிழ் கூட்டமைப்பு எதிர்காலத்தில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மக்களுக்கு சேவை வழங்கும். அந்த நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிகமான ஆசனங்களை கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளும் என தெரிவித்த அவரிடம்,

கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு போட்டியிடுகின்றதா உங்கள் அமைப்பின் வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன எத்தனை சபைகளை உங்களால் இந்த முறை கைப்பற்ற முடியும் என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர் கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதைப்போன்று தமிழர் முற்பேக்கு கழகம் இணைந்து போட்டியிடுகின்றோம். நிச்சயமாக கிழக்கு தமிழர் கூட்டமைப்பை மக்கள் வரவேற்கின்றார்கள். அதுமாத்திரமல்ல அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. மிக விரைவில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்த வகையில் கிழக்கு மானத்தின் பயணிக்கும். மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான சபைகளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, முற்போக்கு தமிழ் கழகம் இpணைந்து இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெறும்.

கிழக்கு மாகாணத்தில் பொறுப்பு மிக்க ஒரு அரசியல் கட்சி என்ற ரீதியில் எமது கூட்டமைப்பு பற்றி விமர்சித்துக் கொண்டிப்பதையும் ஊடகங்கள் வாயிலான செய்திகளை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்புடன் ஊடகங்களுக்கு இருக்கின்றன. பட்டலத்தை வதைமுகாம் மாத்திரம் அல்ல அதேபோன்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள், காணாமலாக்கப்பட்டுள்ளது பிரச்சனை, போன்ற பல விடையங்கள் தொடர்பிலும், தொடர்ந்து நாம் கருத்துத் தெரிவித்து வருகின்றோம். 

குமாரசாமி நந்தகோபன் அவர்கள்கூட சுட்டுக் கொல்லப்பட்டார்.  அனைத்து விடயங்களுக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் கொலைச் சம்பவங்களுக்கும் உரிய தீர்வினை சட்ட ரீதியான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அவை உரிய தீர்வு ஒழுங்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 

வாக்களிப்பது மக்களின் உரிமை அவர்கள் இருமுறை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் வாக்களித்து இருந்தார்கள் மக்களின் எதிர்பார்ப்புகள் என்றெல்லாம் பிழைக்கப்படுகின்றதோ அந்த எதிர்பார்ப்பு யார் மீது அவர்கள் எதிர்பார்த்து வாக்களித்தார்களோ அந்த எதிர்பார்ப்புகள் பிழைக்கப்படுகின்ற போது மக்கள் சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.









 

SHARE

Author: verified_user

0 Comments: