மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தின்
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழூர் சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் ஏ.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக் கலந்து கொண்டிருந்தார். இதன்போது பாடசாலை மாணவர்களிடையே மூன்று இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் விவேகானந்தா இல்லம் 420 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், விபுலானந்தா இல்லம் 390 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், இராமகிருஸ்ணா இல்லம் 370 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment