15 Mar 2025

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பில் உதயம் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்து.

SHARE

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு மட்டக்களப்பில் உதயம் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்து.

எதிர்வரும் காலங்களில் இடம்பெற உள்ள தேர்தல்களை மையமாக வைத்து கிழக்கு மாகாணத்தில் சனிக்கிழமை(15.03.2025) கிழக்கு தமிழர் கூட்டமைப்பு உதயமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு சனிக்கிழமை மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. 

இதன் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சதாசிவம் வியாழேந்திரன், மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கலந்து கொண்டதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பகிர்ந்து கொண்டனர். 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் முற்போக்கு தமிழர் கழகத்தின் செயலாளர் ரோஸ்மண் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

பின்பு உள்ளூராட்சி தேர்தல்களில் வேட்பாளர்களின் பங்கீடு சம்பந்தமாகவும் இங்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், எதிர்வரும் வாரங்களில் மேலும் பல கட்சிகள் இந்த கூட்டமைப்பின் கீழ் இணைய உள்ளதாகவும்  அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புகள் கிழக்கு மாகாண மக்களின் நலன் கருதி இக்கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர்கள் இங்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இவ் அமைப்பின் முக்கியத்துவம் பற்றியும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: