மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் களுமுந்தன்வெளி
கஜமுகன் வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா.
வித்தியாலய அதிபர் என்.இராமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், கோட்டக்கல்வி அதிகாரி அருள்ராசா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பழையமாணவர்கள், அப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கல்வி, கலை, மற்றும் ஏனை இணைப்பாடவிதானங்களிலும் திறமைகளை வெளிக்காட்டிய 150 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், அப்பாடசாலையில் கல்விப் பொதுத்தர சாதாரண தரம் வரைக் கல்வி கற்று வெளியேறி பின்னர் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த பழைய மாணவர்களுக்கும் இதன்போது பதக்கங்கள், பரிசில்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இப்பாடசாலையில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்த பரிசழிப்பு விழா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய இலத்திரனியல் சஞ்சிகை ஒன்றும் பிரதம அதிதி வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment