10 Mar 2025

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல்.

SHARE

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60  வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60  வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை(09.03.2025) மட்டக்களப்பில் இடம்பெற்ற  உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பங்கேற்கும் பெண்களுக்கான  விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் தேர்தல் சட்டங்களை பின்பற்றி  கட்டுப்பனம் மற்றும் வேட்புமனுத் தாக்கல் என்பவற்றை உரிய நேரத்திற்கு முன்னெடுப்பதன் மூலம் தேர்தல் திணைக்களத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் அமைதியான தேர்தலை நடத்தி முடிக்க சகல தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் செலவீனங்கள்  உரிய முறையில் பின்பற்ற வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்காக எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள பெண்கள் பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்கேற்கவுள்ள புதிய அரசியல்வாதிகளுக்குப் அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் விகையில் இந்த விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது..

மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.அர்ச்சுதன் வளவாளராகக் கலந்து கொண்டு உள்ளுராட்சி தேர்தல்கள் சட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.

செயலமர்வில் மட்டக்களப்பு, மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட உறுப்பினர் சியாமினி மற்றும் பெண் அரசியல் பங்குபற்றுனர்கள எனப் பலர் கலந்து கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: