பெண் விடுதலை இல்லாமல் மண் விடுதலை பெற
முடியாது – பிள்ளையான்.
பெண் விடுதலை இல்லாமல் மண் விடுதலை பெற முடியாது உலகத்தின் சனத்தொகையிலேயே அரைவாசிக்கு மேல்பங்கு பெண்கள் நமது நாட்டிலும், 52 வீதமானவர்கள் பெண்கள்;. நீதி, பெண்களின் விடுதலை, சமத்துவம் என்பன மிக முக்கியமாக இன்றியமையாததாகும்.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிக் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(08.03.205) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
அந்த சமத்துவத்திலே பெண்களின் விடுதலைக்கு பங்களிப்பு செய்வது என்பதில் பொருளாதாரப் பிரச்சினை மிகவும் மோசமான பிரச்சினையாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இந்த விடயங்களை சரி செய்வதுதான் அரசியலில் இருக்கக்கூடிய ஒரு நாட்டினுடைய தலைவருடைய தலையாய பணியாகும். கட்சிகள் முற்போக்கான பெண் தலைவி, மாறும் பெண்ணியல்வாதிகளும் போராடி தியாகம் செய்து உயிர்த்தியாகம் செய்து இரத்தம் சிந்தி துன்புறுத்தல்களை அனுபவித்து சட்டரீதியாக பெற்றுக் கொடுத்த அங்கீகாரத்தை நினைவு கூறும் நாள்தான் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியானது ஒவ்வொரு வருடமும் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும், பெண்களை அணிவகுத்து கோஷமிட்டு நடந்து வந்து பிரகடனம் செய்து, மகளிர் கீதம் பாடி இதை நாங்கள் செய்து வருகின்றோம். எதிர்காலத்திலும் இதைத்தான் நாங்கள் செய்ய போகின்றோம் என்பதை அறைகூவல் விடுத்த இந்த கட்சியைத்தான் நாங்கள் வளர்த்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையிலே தொடர்ந்தும் பெண்களது செயற்பாட்டை நாங்கள் மதிக்கிறோம், வரவேற்கிறோம், மகளிருக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை எப்போதும் தயாராக இருக்கிறது.
இந்த நாட்டிலேயே சட்டரீதியாக எவ்வளவோ நன்மைகள் பெண்களுக்கு இருக்கின்றன. அதை கடந்து சமாளித்துக் கொள்வோம் என்கின்ற பெண்களுடைய இயல்பாக இருக்கிற விட்டுக் கொடுக்கின்ற குணம்தான் இன்னமும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றன. நிச்சயமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது எப்போதெல்லாம் அதிகாரத்துக்கு வந்ததோ அப்போதெல்லாம் பெண்களுக்கான வாய்ப்பை நாங்கள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றோம். அதுவும் பெண்கள் அதிகார பலத்துக்கு வருவதற்கு அந்த அதிகாரத்தில் இருக்கின்ற பெண்களுக்கு நாங்கள் உதவி செய்திருக்கின்றோம்.
நாட்டிலே வாழ்கின்ற குறிப்பாக வடகிழக்கிலே வாழ்கின்ற பெண்களுக்கு, பெண்கள் மீது நம்பிக்கை இல்லையா என்கின்ற சந்தேகம் ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் தென்பகுதியிலே பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன தென் பகுதியில் அதிகமான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விகிதாசாரத்திற்கு போகாமல் போனாலும் கூட, உள்வாங்கி இருக்கிறார்கள். இங்கு போலியாக தமிழ் தேசியம் பேசி சென்றவர்களும் உருவாக்கவும் இல்லை அதற்கான அடித்தளம் இடவில்லைஇடப் போவதும் கிடையாது என்பதை மக்கள் அறிவார்கள்.
ஆனால் அந்த நிலைப்பாட்டை நாங்கள் செய்திருக்கின்றோம். யாப்பிலை திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கின்றோம். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் யாப்பிலே கொண்டு வந்திருக்கின்றோம். பெண்களும் அதிகமாக இருக்கின்றார்கள் ஆனால் தலைமைத்துவத்திற்கு வருவதில்லை இன்னமும் காலதாமதம் இருந்து கொண்டிருக்கின்றது.
யுவதிகளை, பிரதேசமட்ட தலைவர்களை நான் கேட்பது நாங்கள் வருகின்ற மாகாண சபை தேர்தலிலே, உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலும், மட்டக்களப்பிலேயே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவியாக கூட ஒருவர் வர முடியும். அதற்கான தயார்படுத்தவில்லை துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய மகள் இதைத்தான் தமிழ் மக்கள் விடுதலை புலி கட்சி எதிர்பார்க்கிறது.
வெறுமனே வருவதும், பேசுவதும், அமர்வதும், கோஷம் எழுப்புவதும், முக்கியமல்ல. ஏனைய எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது போல நாங்கள் விமர்சனத்திற்கு உள்ளாவது பிரச்சினை அல்ல நாங்கள் எதை செய்து காட்டினோம் எதை இந்த மண்ணுக்காக விட்டுச் செல்லப் போகின்றோம் எம்னுடைய தலைமுறையை நாங்கள் வாழ வைத்தோமா? கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்தை காப்பாற்றுகின்றோம் என்கின்ற அரசியல் இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் பெண்களின் பிரதான பங்கு இருக்க வேண்டும்.
கிழக்கு மீட்சி பெறவேண்டுமாக இருந்தால்
நாங்கள் ஒன்றுபட வேண்டும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல கிராமப்புறங்களில்
இருக்கின்ற எங்களை விமர்சன ரீதியாக ஏற்றுக்கொண்டு வெறுத்தவர்களை அணி திரட்ட வேண்டும்.
எமது கிராமமட்ட அமைப்புகளை கட்டி எழுப்ப வேண்டும் அந்த அமைப்புகளுடைய கட்டுக்கோப்பான
செயற்பாடுகளைதான் இந்த அரசியல் இயக்கத்தை வெளிப்படுத்தும் இந்த அரசியல் இயக்கம் பெண்களுக்கு
சந்தர்ப்பத்தை வழங்குகின்றபோது நிச்சயமாக பெண்கள் நடைபோட முடியும் என நம்புகின்றேன்.
அந்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு பாடுபடுவோம் எங்களுக்கு
இருக்கின்ற எல்லாவிதமான சவால்களையும் முறை தெரிவதற்கும் எதிர்கொள்வதற்கும் நாங்கள்
தயங்காமல் குரல் கொடுப்போம் பணியாற்றுவோம் என்பதற்காக வேண்டி அனைவரையும் அன்பாக அழைக்கின்றேன்
என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment