12 Feb 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கான நிதிகளை வீணடிக்காது - - பிரபு எம்.பி

SHARE

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கான நிதிகளை வீணடிக்காது - பிரபு எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கான நிதிகளை வீணடிக்காது. தேர்தல் வெற்றி நோக்காக கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் 122 கோடி ரூபாய்கள் கடந்த கால அரசாங்கத்தினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  நஷ்ட ஈடாக வழங்கப்பட்டிருந்தது எமது  அரசாங்கத்தினால் இதற்கான விசாரணைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது என தேசி மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் செவ்வாய்கிழமை(11.02.2025) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

கடந்த கால அரசாங்கத்தின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரகலை  போராட்டத்தின் போது அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  இல்லங்கள் சேதமாக்கப்பட்டன என மதிப்பீடுகள் செய்யப்பட்டு 122 கோடிகள் ரூபாய்கள் கடந்த கால அரசாங்கத்தினால் நஷ்ட ஈடாக வழங்கப் பட்டிருந்தன. கடந்த கால பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இவ்வாறான தேர்தல் வெற்றியின் நோக்காக கொண்டு இந்த வழங்கி இருந்தனர். 

இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, மக்கள் கஷ்டப்படுகின்ற காலங்களில் இவ்வாறான பெரிய தொகைகளை வழங்கி மக்களின் வரிப்பணத்தை இவர்கள் வீணடித்திருக்கின்றார்கள். 

இவ்வாறான செயற்பாடுகளை எமது அரசாங்கம் ஒருபோதும் முன்னெடுக்காதே எமது தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தினால் இதற்கான விசாரணைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.

 இவ்வாறான வீண் விரயங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இவர்களை மக்கள் இனம் கண்டு இவர்களை நிராகரிப்பதோடு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மக்களுக்கான நிதிகளை வீணடிக்காது. என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

 


SHARE

Author: verified_user

0 Comments: