கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக
அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு.
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று வெள்ளிக்கிழமை(07.02.2025) கோயில்போரதீவு விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் கலந்து கொண்டு கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் அதிபர்களுக்கு விளக்கமளித்தார்.
மகிழ்ச்சியான பாடசாலை என்ற கருப்பொருளை மையப்படுத்தி பாடசாலைகளில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. நம்பிக்கை மிக்க ஒழுக்கமுள்ள பாடசாலை சமூகத்தை உருவாக்குதல், சுற்றாடல் பேண்தகு தன்மையை மேம்படுத்தல், விரயங்களை குறைத்தல், தூய்மையானதும், பசுமையானதுமான சுற்றாடல், ஆரோக்கியமான பிரஜைகள், பல்வகையை மதிக்கும் மகிழ்ச்சியான வகுப்பறை, போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பிலும், அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பிலும், வளவாளராக கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் அதிபரிகளிடத்தில் தெளிவுபடுத்தினார்.
இதன்போது மேலும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment