மட்.புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலை
மாணவர்களின் புதுமுக புகுவிழா.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை ரவேற்கும் புதுமுக புகுவிழா வெள்ளிக்கிழமை(07.02.2025) நடைபெற்றது.
அகரம் பாலர் பாடசாலை தலைவர் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாலர் பாடசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.பரணீதரன் கலந்து கொண்டார்.
மேலும் இதன்போது புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கோ.கிரிதரக்குருக்கள், கிராமசேவை உத்தியோகத்தர் திருமதி தயனி கிருஷ்ணாகரன், சமூக செயற்பாட்டாளர் கிருபேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆகரம் பாலர் பாடசாலைக்கு வருகைதந்த புதிய மாணவர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். சிவசிறி கோ.கிரிதரக்குருக்களினால் மேற்கொள்ளப்பட்ட விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாணவர்களின் ஆற்றுகையும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment