7 Feb 2025

நெல் கொள்வனவு இடங்களில் அனுமதிக்கப்படாத, முத்திரையிடப்படாத, நிறுவை,அளவை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை.

SHARE

நெல் கொள்வனவு இடங்களில் அனுமதிக்கப்படாத, முத்திரையிடப்படாத, நிறுவை,அளவை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  நெல் அறுவடை  இடங்களில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது  அனுமதிக்கப்படாத முத்திரையிடாத நிறுவை,அளவை உபகரணங்களும்  பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளதாக மட்டக்களக்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் சோதனை நடவடிக்கையின் போது அனுமதிக்கப்படாத  நிறுவை அளவை உபகரணங்கள் பறிமுதல் மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் தினைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது  அனுமதிக்கப்படாத நிறுவை அளவை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் பணிப்புரைக்கு அமைவாக வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது  அனுமதிக்கப்படாத 10 நிறுவை அளவை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் தினைக்கள மாவட்ட ஆய்வுகூட  நிலைய பொறுப்பதிகாரி வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தற்போது நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 110 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கையின்போது  அனுமதிக்கப்படாத 10 நிறுவை அளவை உபகரணங்களும், 4 முத்திரையிடாத நிறுவை அளவை உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நிறுவை அளவைக்கு அனுமதிக்கப்பட்ட  43  நிறுவை அளவை உபகரணங்களும் காணப்பட்டதாக அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் தினைக்கள மாவட்ட ஆய்வுகூட  நிலைய பொறுப்பதிகாரி வீ .விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

பறிமுதல் செய்யப்பட்ட  அளவை உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் வியாழக்கிழமை (06.02.2025) மாலை நேரில் சென்று பார்வையிட்டதுடன்  கைப்பற்றப்பட்ட நிறுவை அளவை உபகரணங்களை அளவீட்டு அலகுகளும் நியமங்களும் சேவைகளும் சட்டத்தின்  பிரகாரம் சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய மாவட்ட நீதிமன்றத்திற்கு  சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கபடவுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் இதன் போது தெரிவித்தார். 








SHARE

Author: verified_user

0 Comments: