25 Feb 2025

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா.

SHARE

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விழா.

தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில்  மிகவும் விமர்சையாக வித்தியாலய அதிபர் சபேஸ்குமார் வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது. 

களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி கதிர் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று பின்னர் நெற்கதிர்கள், பண்பாட்டுப் பவனி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பட்டிருப்பு களுவாஞ்சிகுடி மத்திய மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையைச் சென்றடைந்தது. கொண்டு சென்ற நெற்கதிர்கள் அடிக்கப்பட்டு புத்தரிசி குற்றி புதுப்பானையில் இட்டு பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன. 

இதன்போது தமிழ் தாய் வாழ்த்து, இசை வாத்திய ஆற்றுகை, கிராமியநடனம், நாட்டார் நடனம், உழவர் நடனம், ஒயிலாட்டம், நாட்டார் பாடல், கவியரங்கம், தமிழர் பெருமையை பறைசாற்றும் பல்வேறு கிராமிய நிகழ்வுகள் என்பன ஆற்றுகை செய்யப்பட்டன.  

இதன்போது பாடசாலை ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கலைஞர்கள், உள்ளிட்ட பலரும் பற்கேற்றிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: