மட்.கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய
வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு.
மட்;டக்களப்பு மாவட்டம் கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் சா.மதிசுதன் தலைமையில் சனிக்கிழமை(22.02.2025) இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான மு.ஹரிகரராஜ், ஆர்.ஜே.பிரபாகரன், கல்வி இணைப்பாளர் எஸ்.தில்லைநாதன், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி ஏ.ரவீந்திரன், மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியரகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது குறிஞ்சி முல்லை மருதம் என 03 இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு
போட்டிகள் இடம்பெற்றதோடு, மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, அணிநடை போன்றன இடம்பெற்றதைத்
தொடர்ந்து திறனாய்வு போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்களும்,
வெற்றி கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment