கொக்கட்டிச் சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி பூஜை.
சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கு இலங்கையில் உள்ள சிவன் ஆலயங்களில் வியாழக்கிழமை(26.02.2025) விசேட நான்கு சாம பூஜைகள் இடம் பெற்றன.
இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கொக்கொட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலும் சிவராத்திரியை முன்னிட்டு பூஜைகள் இடம்பெற்றன.
ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ சோதிநாத குருக்கள் தலைமையில் இந்த விசேட சிவராத்திரி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த புனிதமான சிவராத்திரி முன்னிட்டு விரதமிருக்கும் அடியார்கள் சிவனுக்கு நெய் விளக்கேற்றி வில்வம் இலையால் அர்ச்சனைகள் செய்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர் இடம் பெற்ற இந்த விசேட பூஜை நிகழ்வுகளுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்த அடியார்கள் வந்து கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
0 Comments:
Post a Comment