16 Feb 2025

ஓந்தாச்சிமடம் கடற்கரையில் பிரதேச சபை துப்பரவு.

SHARE

ஓந்தாச்சிமடம் கடற்கரையில் பிரதேச சபை துப்பரவு.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிந்தனையின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநரின்  வழிகாட்டுதலின் அடிப்படையிலும் அரசினுடைய கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் மூலம்  கடற்கரையினை துப்புரவு செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்கரைகள் இன்றைய தினம் (16)துப்பரவு செய்யப்பட்டது. 

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பிரதேசங்களும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி துப்பரவு செய்யப்பட்டது. 

அதிலும் குறிப்பாக அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற ஓந்தாச்சிமடம் கடற்கரையானது இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினுடைய செயலாளர்  சுப்பிரமணியம் சுபறாஜன் அவர்களுடைய தலைமையில் சபையில் கடமையாற்றுகின்ற அனைத்து உத்தியோகஸ்தர்களின் பங்கு பற்றலுடன்  ஓந்தாச்சிமடம் கடற்கரை பிரதேசம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்  மற்றும் சுனுடீ  டீயுNமு சார்பாகவும் ஏனைய திணைக்களங்கள் சார்பாகவும் பிரதிநிதிகள் பங்கு பற்றி குறித்த துப்பரவு பணிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 




 



SHARE

Author: verified_user

0 Comments: