தமிழரசுக் கட்சின்
கட்சியின் பதில் பொதுச் செயலாளராக எம்.ஏசுமந்திரன் நியமனம்.
நீண்ட காலமாக எமது கட்சியின் பொதுச்செயலாளராக கடமை புரிந்த வைத்தியர் சத்தியலிங்கம் தான் அந்தப் பதவியில் இருந்து இராஜனாமா செய்வதாக அறிவித்திருக்கின்றார் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அதனை செய்வதாக அறிவித்திருக்கின்றார் இன்றய கூட்டத்தின்போது பொதுச் செயலாளராக துணைப் பொதுச் செயலாளராகிய நான் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றேன்.
என இலங்கை தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு சூட்டம் ஞாயிற்றுக்கிழமை(15.02.2025 மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் கூடியது அதன் பின்னர் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இலங்கை தமிழரசுக்
கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் சில விடயங்கள் பேசப்பட்டன பலருக்கு எதிராக
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றன. சிலர் கட்சியின்
உறுப்புரிமையிலிருந்து ஏற்கனவே விளக்கப்பட்டு இருக்கின்றார்கள். அது மூன்று
மாவட்டங்களில் இருந்துதான் அந்த பட்டியல் பொதுச்செயலாளருக்கு
கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏனைய மாவட்டங்களிலும் கட்சிக்கு எதிராகவும், வேறு
அணிகளிலே போட்டியிட்டவர்கள், அவர்களுடைய பெயர்களை நிர்வாகச் செயலாளர் தானாக அடையாளம்
கண்டிருக்கின்றார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த பட்டியல்
கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறானவர்களும் அடையாளம் காணப்பட்டு கட்சிக்கு
எதிராக செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு ஒழுங்காற்று நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.
அவை இன்னும் செய்து முடிக்கப்படவில்லை. எனினும் அவர்களுக்கு உரிய விளக்கங்களை கூறி கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒழுக்காற்று குழுவிற்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட வேண்டியது. தற்போது இருக்கின்ற ஒழுக்காற்று குழுவிலே சிலர் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஸ்ரீநேசன் அவர்களும் சரவணபவன் அவர்களும் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதன் தலைவராக குருகுலராஜா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் எமது கட்சித் தலைவருக்கு கொடுத்த கடிதம் செயற்குழுவில் வாசித்துக் காட்டப்பட்டது. இது தொடர்பில் கடந்த மத்திய செயற்குழு கூட்டத்தில் நாம் ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தோம் அந்த குழுவில் இன்றைய தினம் சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அதிலேயேதான் சுயமாக விலகிக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்ததை அடுத்து அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடைய பெயர் முன்மொழிக்கப்பட்டிருக்கிறது அவர் அதில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை என்பது எங்களுக்கு தெரியும் நாங்கள் அதனை முன் வைப்போம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் தற்போது தங்களுக்கு மக்கள் ஆணை இருப்பதாக சொல்கிறார்கள் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அவர்களுக்கு மக்கள் ஆணை கொடுக்கப்பட்டிருக்கின்றது. வடக்கிலேயும் தங்களுக்கு ஆணை இருப்பதாக அவர்கள் சொல்லுகின்றார்கள். தமிழ் மக்களுடைய ஆணையும் தங்களுக்கு இருப்பதாக சொல்லுகின்றார்கள்.
நாங்கள் அவர்களிடத்திலே கூறுவது உங்களுக்கு மக்கள் ஆணை இருக்கின்றது என சொல்லுகின்றீர்கள். அரசியல் தீர்வை முண்மைப்போம் என்று அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் விசேடமாக அமைச்சரவை பேச்சாளர் ஊடகங்களுக்கு சொல்லி இருக்கின்றார். பொருளாதாரப் பிரச்சினைதான் முக்கியமானது அதைத்தான் நாங்கள் கவனிப்போம் புதிய அரசியலமைப்பு கொண்டு வருவதன் விவகாரம் அதை பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி இருக்கின்றார். வெறும் சிலரும் மூன்று வருடங்களுக்கு பின்னர் அதைப்பற்றி பேசலாம் எனவும் சொல்லி இருக்கிறார்கள் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இந்த நாட்டினுடைய பிரதான பிரச்சனை தமிழ் தேசிய பிரச்சினை வேறு எந்த ஒரு நாட்டிலும்கூட இவ்வாறு யுத்தம்கூட நடைபெறவில்லை பொருளாதாரப் பிரச்சினைக்கும் அடிக்கோலாக இருப்பது அந்த யுத்தம் தமிழ் தேசிய பிரச்சனை அதனால் அதை தீர்ப்பதை நாங்கள் பிற்போட்டு விட்டு பொருளாதார பிரச்சினையை நாங்கள் முதலில் கவனிப்போம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களும் பாராளுமன்றத்தில் இதனை சுட்டிக்காட்டி இருந்தார். ஆகவே அரசாங்கத்திடத்திலேயே நாங்கள் வலிந்து கோருவது நீங்கள் சொன்ன அந்த அரசியல் தீர்வை நீங்கள் முன் வையுங்கள் உங்களிடத்திலே அரசியல் தீர்வு இருக்கின்றது. என சொல்லுகின்றீர்கள் அதனை நீங்கள் காலம் தாழ்த்தாது முன்வைக்க வேண்டும் என்பது நமது கோரிக்கை தமிழ் மக்களுடைய பிரதான கட்சியான எங்களுடைய நிலைப்பாடு இதுதான் என்பது சகலருக்கு தெரியும்.
இந்த நாட்டிலேயே மாத்திரமன்றி உலகம் பூராகவும் தெரியும் காலாகாலமாக இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அரசியல் தீர்வு எப்படியானது என்பது என்ன அடிப்படையிலானது என்பது நாங்கள் சொல்லி வந்திருக்கின்றோம். அது தொடர்பான பரிவுகளை நாங்கள் செய்திருக்கின்றோம். பேச்சு வார்த்தைகள் நடத்தி இருக்கின்றோம். அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆகவே நாங்கள் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதை தீர்ப்பதற்கு எங்களுக்கு தெரியும் என சொல்லுகின்ற அரசாங்கம் நீங்கள் முதலிலேயே உடனடியாக காலம் தாழ்த்தாது அரசியல் தீர்வு சம்பந்தமாக புது அரசியலமைப்பு வரைவை முன்வைக்க வேண்டும் என்பது எமது அழுத்தம் திருத்தமான வேண்டுகோளாகும்.
அண்மையில் மரணமடைந்த எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய இறுதிக் கிரியின் போது நிகழ்ந்த பல சில அசம்பாவிதங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் பேசப்பட்டன. எனது கட்சியினுடைய நிறைவேற்ற குழு உறுப்பினர் உடைய 18 பேருடைய புகைப்படங்களை பிரசுரித்து பதாகைகள் கட்டப்பட்டு அவருடைய மரணத்திற்கு இவர்கள்தான் காரணம் என்றெல்லாம் விஷமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தலைவரும் பொதுச்செயலாளர் அவரை சென்று பார்வையிட்டதனால் தான் அவர் விழுந்ததாகவும், செய்திகள் பரப்ப விடப்பட்டிருந்தன. இது சம்பந்தமாக கட்சித் தலைவர் பொலிசுக்கு முறைப்பாடு செய்திருக்கின்றார். இணைய வழி மூலம் செய்யப்படுகின்ற பிரச்சாரத்திற்கு பிரச்சாரம் சம்பந்தமாகவும் பதாகைகள் கட்டப்பட்ட விடயம் சம்பந்தமாகவும் கட்சி சார்பாக கட்சித் தலைவர் என்ற ரீதியிலே அவர் பொலிஸ் முறைப்பாடு செய்திருக்கின்றார். இது சம்பந்தமாக வேறு சிலரும் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள் இந்த விடயத்திலே பொலிசார் மும்முரமாக செயல்பட்டு இந்த விடயங்களை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய ஏகபித்த கோரிக்கையாகும்.
இது அரசாங்கத்துக்கும் பொருசாருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் நாங்கள் கூறுகின்ற செய்தியாகும். மிக மோசமான குற்றச் செயல் நிகழ்ந்திருக்கின்றது. ஒரு பிரதான கட்சியின் தலைவராக இருந்தவர் அவருடைய மரணச் சடங்குகளில் இந்த கட்சியினுடைய மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர் தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று சொல்லி பதாகைகளை வீதியில் கட்டி தொங்க விடுவது என்பது அந்த 18 பேருக்கு எதிராக வன்முறையை தூண்டுகின்ற ஒரு குற்றச்செயல். அதைச் செய்கின்றவர்கள் அதற்கு பின்னால் இருந்தவர்கள் அனைவரும் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய மத்திய செயற்குழுவின் கோரிக்கையாகும்.
இதுதொடர்பில் எங்களுடைய கவலையையும் நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம். கட்சியாக அவருக்கு உரிய முறையிலே நாம் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. கட்சி பணிமனைக்கு அவருடைய உடல் கொண்டுவர முடியாமல் இருந்தது, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரும் இன்னும் சிலரும் இறந்த இறுதிக்கு இடையில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது இன்னும் இன்றைய கூட்டத்தின் ஆரம்பத்திலேயே அவருக்கு அஞ்சலியுடன்தான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முறையாக இது செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
கட்சியிலிருந்து
அண்மையிலே விலக்கப்பட்ட ஒருவர் அந்த அவரது உடலுக்கு கட்சி கொடியை போர்த்தியது
எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்வியும் இங்கு கேட்கப்பட்டது. கட்சிக்கொடி
போர்துவதென்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். அது கட்சி தலைவர்னாலும் முக்கிய
உத்தியோகஸ்தர்களினாலும், செய்யப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கட்சியிலிருந்து மிக
அண்மைக்காலத்தில் நீக்கப்பட்டவர் கட்சி கொடியை போர்த்தியது சம்பந்தமாகவும்
எங்களுடைய கண்டனங்களையும் மத்திய குழு செயற்குழு தெரிவித்திருக்கின்றது.
நீண்ட காலமாக எனது கட்சியின் பொதுச்செயலாளராக கடமை புரிந்த வைத்தியர் சத்தியலிங்கம் தான் அந்தப் பதவியில் இருந்து இராஜனாமா செய்வதாக அறிவித்திருக்கின்றார் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அதனை செய்வதாக அறிவித்திருக்கின்றார் அனைவருக்கும் தெரிந்த அடிப்படையில் பொதுச் செயலாளராக இருந்தவர் ராஜினாமா செய்யும்போது துணைப் பொதுச் செயலாளராகளில் ஒருவராக இருந்த வைத்தியர் சத்தியலிங்கம் யாப்பின் அடிப்படையிலே பதில் பொதுச் செயலாளராக நியமனச் செய்யப்பட்டு பின்னர் மத்திய செயற்குழுவினாலே பதவி நிரப்புதல் என்கின்ற சரத்தின் கீழே பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு மிகவும் கடினமான விடையத்தின் கீழ் கட்சியை முன் கொண்டு வந்தவர் அவருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவர் இந்நிலையில் அவர் தற்போது இராஜினாமா செய்கின்ற காரணத்தினாலே யாப்பிலே சொல்லப்பட்டதன் அடிப்படையில் தற்போது இருக்கின்ற கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகிய நான் (எம்.ஏ.சுமந்திரன்) அப்பதவிக்கு பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றேன். இந்த நியமனம் சம்பந்தமாகவும், இது ஏகமானதான தீர்மானம் அல்ல என்று சொல்ல வேண்டும் என்றும் மூன்று பேர் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இது யாப்பின் அடிப்படையில் துணைப் பொதுச் செயலாளர் செய்ய வேண்டிய பணி பொதுச் செயலாளர் இராஜினாமாவை அடுத்து பொதுச் செயலாளராக நான் கடமையாற்றுவேன்.
எமது கட்சியின் உறுப்பினமையிலிருந்து அரியநேத்திரன் நீக்கப்பட்டிருக்கின்றார். நாங்கள் ஒரு தடவை சொன்னால் அதுதான் செய்தி அவர் நீக்கப்பட்டிருக்கின்றார். மாறாக அவர் நாம் அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை என எங்களுக்கு மீண்டும் தெரிவிக்கவில்லை.
கட்சியின் பொதுச்சபை கூட்டம் யாப்பை மீறி கட்சி செயற்பட்டு இருக்கின்றது எனக் கூறி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த வழக்கிலேயே இடைக்கால தடை கட்டளைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளை சுமுகமாக தீர்த்துக் கொள்வதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அது சம்பந்தமாகவும் கட்சியின் செயற்குழுவில் பேசப்பட்டன வழக்குகள் நிறுவையிலே இருக்கின்ற போது அது சம்பந்தமாக பேசப்பட்ட விடயங்கள் என்ற காரணத்தினாலே அது தொடர்பில் நான் விடயங்களை நான் வெளியிடவில்லை.
ஆனால் அது சம்பந்தமாக தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுகின்றன சுமூகமாக வழக்குகளை தீர்த்துக் கொள்ளலாமா என்பது தொடர்பில் நாங்கள் சில முயற்சிகளை இன்றைய கூட்டத்தின் போதும் எடுத்திருக்கின்றோம் அவ்வாறான் இணக்கப்பாட்டோடு வழக்குகள் தீர்க்கப்பட்டால் உடனடியாக பொதுக்குழு கூட்டக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளன.
இதைகளைத் தவிர மேலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மூன்று வழக்குகளிலும் அவர்கள் கூறிய இடைக்கால இடைக்கால தடை கட்டளைகளை நீதிமன்றம் நிராகரித்து இருக்கின்றது. அதனால் அது கட்சிக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வழக்குகள் இருக்கின்றன அந்த வழக்குகளுக்கு நான் முகம் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் கோரி கேட்டுக் கொண்ட இடைக்கால நிவாரணங்களை நீதிமன்றங்கள் நிராகரித்திருக்கின்றனர்.
ஒவ்வொரு தேர்தல் முறைமையும் அனுசரித்து தான் நாங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக தனித்துப் போட்டியிடுகின்றது என்ற தீர்மானத்தையும் எடுத்திருந்தோம். தனித்து தனித்து போட்டியிட்டதால் பின்னர் ஒற்றுமையாக சேர்ந்து ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் அடிப்படையில்; தான் இன்றைய தினமும் நாங்கள் அது குறித்து எடுத்த தீர்மானம் அக்காட்சிகளோடு நாங்கள் தேர்தலுக்கு முன்னதாகவே பேசி ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்துவோம். ஆனால் தொழிற்ப ரீதியிலே எந்தெந்த இடங்களிலே ஒரு கட்சியாக போட்டியிடுவதா அல்லது இரண்டு மூன்று கட்சிகளாக போட்டியிடுவதா பின்னர் ஒன்று சேர்வதாஎன்ற சூழ்நிலைக்கேற்ப நாங்கள் பின்னர் முடிவில் எடுப்போம்.
மக்கள் எதிர்ப்பை மீறி
மதுபான சாலைகள் திறக்கப்பட்டால் மக்கள் கோரிக்கை விடுத்தால் பல நீதிமன்றங்களிலே
நான் அந்த விடயத்திலே முன்னெடுத்து பல இடங்களிலே நீதிமன்ற தடைகளையும் பெற்று
கொடுத்திருக்கிறோம். முழங்காவில், உடுப்பட்டி போன்ற இடங்களிலேயே திறக்கப்பட்ட
மதுபான சாலைகளுக்கு எதிராகவும் நாங்கள் நீதிமன்றத்தின் நாடி அதனை தடை செய்து
இருக்கின்றோம். பொதுமக்கள் இவ்வாறு பொதுமக்கள் மதுபான சாலைகளுக்கு எதிர்ப்பு
தெரிவித்தால் அது பொது தொல்லை என்று கருதப்பட்டால் அது மூடப்படலாம் ஆகவே
பெரியநீலாவணை மக்களிடத்திலே நாங்கள் கூறிய விடயம் பொதுஅமைப்புகள் இந்த
மதுபானசாலையை மூடப்பட வேண்டும் என எழுத்து மூலம் முறைப்பாடுகளை செய்தால்
நீதிமன்றத்திலே அதனை உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்த அவர் இலங்கை
தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் யார் என ஊடகவியலாளர் வினவியை கேள்விக்கு பதில்
அளிக்கும் போது எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் நான்தான் என பதிலளித்தார்.
0 Comments:
Post a Comment