15 Feb 2025

மண்டபத்தடி கமல சேவை நிலையத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு.

SHARE

மண்டபத்தடி கமல சேவை நிலையத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு.

விவசாயிகள் தங்களது நெற்செய்கை நடவடிக்கையின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யானை தாக்கங்களிலிருந்து பாதுகாத்து தமக்கு சிறந்த அறுவடையை தந்த இயற்கையின் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு ஒன்று மட்டக்கப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட மண்டபத்தடி கமநல சேவை நிலையத்தில் சனிக்கிழமை (15.2.2025) இடம்பெற்றது. 

மண்டபத்தடி கமநல பிரதேச சேவை பிரிவு உட்பட்டு வரும் 27 கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இதன்போது பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்குப் பiடைத்து நன்றி கடன் செலுத்தி வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர். 

மண்டபத்தடி கமநல நிலையத்தின் பெரும்பாக உத்தியோகஸ்தர் எம்.ஐ.பாய்ஸ் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.  கமநல நிலையமானது அலங்கரிக்கப்பட்டு காலை சுப நேரத்தில் பொங்கல் பானைகளுக்கு அரிசிஇட்டதைத் தொடர்ந்து இறை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிகழ்வின் போது மண்டபத்தடி கமநல  நிலையத்தின் உயர் அதிகாரிகள், ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









 

SHARE

Author: verified_user

0 Comments: