கிழக்கு மாகாணத்தில் இளைஞர் விவகார அமைச்சினால்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.
கிழக்கு மாகாணத்தில் இளைஞர் விவகார அமைச்சினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சனிக்கிழமை(15.02.2025 ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாநகர சபை
கீழ் வரும் பிரதான பூங்காக்களை சுத்தப்படுத்தி அழகு படுத்தும் பணிகள் இதன்போது அரசாங்க
அதிபர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கிலும் நகரை அழகுபடுத்தும் நோக்குடனும் இந்த வேலை திட்டமாக இது அமைந்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தணஜயன் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உயர் அதிகாரிகள் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவரை காலமும் நகரை அழகாக வைத்திருப்பதற்கு இராணுவத்தினரின் உதவியுடன்தான் முன்னெடுத்து வந்தோம். இப்போதுஇது கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டமானது ஒரு தேசிய நிகழ்ச்சி திட்டமாக ஜனாதிபதியினால் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டமானது அரச அதிகாரிகளுக்கு வேண்டிய சகல விளக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக மக்களுக்கு செழிப்பான நாடு அழகான வாழ்க்கை மக்களின் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி மக்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு இந்தத் திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும்.
பாதுகாப்பு படையினர் அரச திணைக்களங்கள் இணைந்து இந்த திட்டத்தை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்க இருக்கின்றோம். இவரை காலமும் இவ்வாறான செயற்பாடுகளை நாம் இராணுவத்தினரின் உதவியுடன்தான் முன்னெடுத்து வந்தோம். ஆனால் இப்போது இது ஒரு தேசிய நிகழ்ச்சி திட்டமாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
நகரை அழகாக வைத்திருப்பதோடு துப்பரவாகவும்
வைத்திருப்பதுதான் முக்கியம் மட்டு நகருக்கு வரப்பிரசாதமாக இருப்பது இந்த வாவி ஆகும்.
எனவே இதனை நாம் சிறுவர்கள் இளைஞர்கள் என சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்.
என அவர் இத்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment