13 Feb 2025

நீரோடைக்குள் பாய்ந்த கார்.

SHARE

நீரோடைக்குள் பாய்ந்த கார்.

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 5.45 மணியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் தெரிவித்தார். குறித்த கால் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்த பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது. 

இதன்போது காரில் பயணித்தவர்கள் 03 பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: