16 Jan 2025

பட்டிப்பொங்கல்

SHARE

உழவர் பெருமக்கள் கடவுளாக செல்வமாக கருதும் கருத்துகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தமிழர் பண்பாட்டோடு உழவுத் தொழிலுக்கும் ,தமது வாழ்வாதாரத்திற்கும், பெரும்பங்காற்றும் பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் பிரதான பண்டிகையாக பட்டிப்பொங்கல் அமைகிறது.

மாடுகளுக்கும்,எருதுகளுக்கும் நீராட்டி, விபூதி அணிவித்து, பொங்கலிட்டு, தேவார பாராயணங்கள் இசைத்து வழிபடுவது வழமை, கடவுளாக போற்றப்படும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் விழாவே பட்டிப்பொங்கலாகும்.

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உறுகாமத்தில் பண்ணையாளர்கள் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அதிதியாக கலந்து கொண்டதோடு, கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் , பண்ணையாளர்களும் சிறப்பித்தனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: