16 Jan 2025

மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு.

SHARE

மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு.

அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் கால்நடைகளையும், வேட்டையாடி வருவதாக வாவியை அண்மித்த பகுதிகளில் வசித்து வரும் கால் நடை வளர்ப்பாளர்களும், மீனவர்களும் பொது மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று புதன்கிழமை (15.01.2025) திகதி பி.ப 2.00 மணியளவில் கல்லடிப் பாலத்திற்கு அண்மித்த  மட்டக்களப்பு அமிர்தகழி தீப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள வாவியில் பசுமாடு ஒன்றை முதலை பிடித்து செல்லும் காட்சி அப்பகுதி மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாட்டை இன்று பிடித்திருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: