வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட
1569 விவசாயிகள் நட்டடு வழங்குமாறு விண்ணப்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பின் வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட விவிசாயிகள் அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருகினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
வெல்லாவெளி, நாதனைவெளி, வேத்துசேனை, காக்காச்சிவட்டை, பாலயடிவட்டை, பலாச்சோலை, நவகிரிநகர், போன்ற பல வயற்கண்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்சைய்கையே இவ்வாறு அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அள்ளுண்டு சென்றுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இம்முறை வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்டு 10148 ஏக்கரில் 4921 விவசாயிகள் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றுள் அண்மையில் ஏற்பட்டிருந்த பெரு வெள்ளப்பெருக்கினால் 2786.5 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்டிருந்த வேளாண்மைச் செய்கை பாதிப்புற்றுள்ளதாகத் தெரிவித்து 1569 விவசாயிகள், தமக்கு நட்டஈடு வழங்குமாறு விண்ணப்பித்துள்ளதாகவும், வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் (2024) இறுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் விவசாய நிலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தமது நெற்பயிர்கள் அதிலிருந்து மீண்டுவந்த ஒருசில நெற்கதிர்களை மீண்டும் இவ்வருடம்(2025) ஆரம்பதிலேயே பெய்த பலத்த மழையினாலும் எஞ்சியிருந்த பயிர்களும் பழுதடைந்து தற்போது தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கின்ற இவ்வேளையில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் நெற்பயிர்கள் கீழே விழுந்து நெல்மணிகள் மீண்டும் முளைத்துள்ளதுடன், இறந்தும்போயுள்ளன.
அப்பகுதியில் ஒரு சில மேடான பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளாண்மைச் வேளாண்மை செய்கைகளில் நெற்கதிர்கள் மின்னுவதாகவும், வயல்கள் அனைத்தும், நிலத்தில் கீழே வீழ்ந்து அழுகிய நிலையில் காணப்படுவதாக விவவாய்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க மிக அண்மைக்காலமாகவிருந்த
காட்டு வேளாண்மை என்கின்ற ஓர் வேளாண்மை இனமும் நெற்யிரினுள் இயற்கையாகவே கலந்து வளர்வதனால்
வேளாண்மைச் செய்கை மிகவும் பாதிப்புற்றுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனதல் தாம் அறுவடை செய்ய முடியாத நிலையிலும் காணப்படுகின்ற
இந்நிலையிலும்கூட அரசாங்கம் நெல்லுக்கான சரியான நிர்ணய விலையை இதுவரையில் அறிவிக்காத
நிலையில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காமல் பெரு நட்டத்திற்கே
தம்மை இட்டுச் சென்றுள்ளதனால் வருகின்ற சிறுபோக வேளாண்மைச் செய்கையை முன்னெடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அங்கலாய்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment