31 Dec 2024

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் களுவாஞ்சிக்குடி நகரில் புதுவருட வியாபாரம்.

SHARE

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் களுவாஞ்சிக்குடி நகரில் புதுவருட வியாபாரம்.

நாளை  பிறக்க உள்ள 2025 ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் இன்றைய தினம் (3112.2024) கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. 

வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களை கட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும் கொள்வனவு செய்வதை காண முடிந்தது. 

பட்டிருப்பு தொகுதியில் களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறது. இங்கு படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட போரதீவுப் பற்று மற்றும் மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: