19 Dec 2024

வெள்ளத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உலர் உணவு மற்றும் பாவனைப்பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE

வெள்ளத்தில் பாதிப்புற்ற மக்களுக்கு உலர் உணவு மற்றும் பாவனைப்பொருட்கள் வழங்கி வைப்பு.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிப்புற்ற மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குமாரவேலியர் கிராமத்தில் வசிக்கின்ற நூறு குடும்பங்களுக்கான அரிசி நுளம்பு வலைகள், பாய், போர்வைகள் என சுமார் தலா 3000 ரூபாய் பெறுமதியான பொருள்கள் புதன்கிழமை(18.12.2024) வழங்கி வைக்கப்பட்டன. 

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினர இந்த பொருட்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தினுடைய நிர்வாகிகளும் குமரவேலியார்க் இல்லாம கிராம உத்தியோகத்தர், கலந்து கொண்டு பாதிப்புற்ற மக்களுக்கான உதவியை வழங்கி வைத்திருந்தனர். 

இந்த உதவி திட்டத்துக்கான நிதியினை ஆஸ்திரேலியாவில் இயங்கி வருகின்ற தமிழ் பொறியியலாளர் நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக லயன்ஸ் கழகத்தினுடைய தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.













 

SHARE

Author: verified_user

0 Comments: