தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் மாற்றமில்லை வெற்றி பெற்ற பின்ன்னர் சாணக்கியன் தெரிவிப்பு.
இலங்கையிலேயே மூன்றாவது அதிகூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமாகும். அந்த வகையிலே தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் மாற்றமில்லை.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பெறுபேறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரது களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்றபோது அங்கு அவரை வரவேற்பாற்காக குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது பாட்டனார் சீ.மூ.இராசமாணிக்கம் அவர்களின் சிலைக்கு மலர் மாலை அவர் அணிவித்ததைத் தொடர்ந்து குழுமியிருந்த ஆதரவாளர்களால் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…..
இது என்னுடைய வெற்றி அல்ல ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களுடைய வெற்றியாகும் நாடு முழுவதும் திசைகாட்டிக்கு சின்னத்துக்கும் அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் இருக்கும் பொழுது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகளை மட்டக்களப்புவாழ் மக்கள் எனக்கு தந்திருக்கிறார்கள் வடக்கு கிழக்கு முழுவதற்கும் இது ஒரு செய்தியாகும்.
வடகிழக்கிலே உள்ள எட்டு மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்த கட்சி இலங்கை தமிழரசி கட்சி மாத்திரம்தான். எங்களுடைய கட்சி தற்பொழுதும் இலங்கையிலேயே தமிழ் மக்களுடைய பிரதானமான கட்சியாகும். இலங்கையிலேயே மூன்றாவது அதிகூடிய ஆசனங்களை பெற்ற கட்சியுமாகும். அந்த வகையிலே தமிழ் மக்களுடைய தமிழ் தேசிய போராட்டம் தொடரும் அதில் மாற்றமில்லை. அதேபோல்தான் என்னுடைய வெற்றிக்காக இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலே பாடுபட்ட வாகரை கதிரவெளி தொடக்கம் துறை நீலாவணை வரைக்கும், படுவாங்கரை, எழுவாங்கரை என அனைத்து மக்களும், பங்களிப்பு செய்திருக்கின்றார்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.
களவாஞ்சிகுடி வீரபத்திர ஆலயத்தின் முன்னால் நான் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தை கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தடுத்தார்கள். அதற்குரிய பதிலடி தற்போது மட்டக்களப்பு மக்கள் வழங்கி உள்ளார்கள். ஆனால் அவர்கள் எங்களுடைய எதிரிகள் அல்ல. இனி வருங்காலத்தில் தமிழரசு கட்சி மாத்திரம்தான் இந்த மாவட்டத்திலேயே மக்களுடைய பிரதிநிதிகளாக இருக்கப் போகின்றோம். அந்த வகையிலே அவர்களையும் இணைத்துக் கொண்டுதான் நாங்கள் பயணிப்போம்.
நாங்கள் எவருக்கும் எதிரானவர்கள் அல்ல. அனைவரையும் இணைத்துத்தான். நாங்கள் இந்த மாவட்டத்திற்கும் இந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் சிறந்த ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்போம்.
மட்டக்களப்பிலேயே கடந்த 24ஆம் ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை அவர்கள் எடுத்த 57000 இற்கு மேற்பட்ட அதி கூடிய வாக்குகளைவிட இம்முறை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எனக்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கியுள்ளார்கள் இது வரலாற்றிலேயே முதன்முறையாக பதியப்பட்ட ஒரு விடயமாகும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment