தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு தீர்வை தருவதாக ஏமாற்றி வந்தனர்.
சிங்கள மக்கள் புதிதாக ஒரு மாற்றத்தை வேண்டி தீர்மானித்து தெரிவு செய்த புதிய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்கா தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது உண்மையான உணர்வுடனும் இருந்திருந்தால் சுயேச்சை குழு தலைவர்களை அழைத்து பேசி அவர்களை உள்வாங்கி தமிழர்களது வாக்குகளை சிதைவடையாமல் தமிழரின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றி இருக்க முடியும் எனபாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 4 இல் போட்டியிடும் எஸ்.சிவதர்ஷன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாகு குறிப்பிட்டார். இதன்போத அவர் மேலும் தெரிவிக்கையில்...
சிங்கள மக்கள் புதிதாக ஒரு மாற்றத்தை வேண்டி தீர்மானித்து தெரிவு செய்த புதிய ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்க புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு தீர்வை தருவதாக ஏமாற்றி வந்தனர். இந்தத் தீர்வை பெற்றுத்தர வேறு எந்த அமைப்பினரும் முன்வரவில்லை.
இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நாம் பாராளுமன்றம் சென்று பணியாற்ற வரும்போது அந்தக் கட்சிகளில்லிருந்து சில துரோகிகள் தேவையானவர்களை மட்டும் வேட்பாளராக்கியுள்ளனர். தமிழ் தேசிய உணர்வோடு பயணிப்போருக்கு சகல கட்சிகளும் அவர்களுக்குரிய இடம் வழங்குவதில்லை. என்ற காரணமாகவே நாங்கள் தற்போது சுயேட்சையாக தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியானது தமிழர்களுக்கு ஒரு முதன்மையான கட்சியாக இருந்திருந்தால் உண்மையான உணர்வுடனும் ஒற்றுமையுடனும் களம் இறங்கியுள்ள சுயேச்சை குழு தலைவர்களை அழைத்து பேசி அவர்களை உள்வாங்கி தமிழர்களது வாக்குகளை சிதைவடையாமல் தமிழரின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றி இருக்க முடியும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment