24 Oct 2024

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் - பிரசாந்தன்.

SHARE

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் - பிரசாந்தன். 

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.  இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம். என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் செவ்வாய்கிழமை (24.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பேரை தெரிவு செய்வதற்காக இம்முறை 392 பேர் போட்டியிடுகின்றனர். எனவே மக்கள் இதில் தெளிவாக இருக்க வேண்டும் எமது கட்சியால் மாத்திரமே கிழக்கு மாகாணத்தை தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்த முடியும். இதற்காக மக்கள் எங்களுக்கு வேண்டிய ஆதரவினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

ஏனெனில் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாலும், அதிக ஆசனங்களை கைப்பற்றும் என்பதாலும், சில போலி முகப்புத்தகங்கள் மூலமும் சில அரசியல்வாதிகளின் கட்டுப்பனங்களை செலுத்தி சுயேச்சை குழுக்களை இறக்கி வேண்டுமென்றே விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு எடுத்துக்காட்டாக உயிர்த்த ஞாயிறு கொண்டு தாக்குதலை தொடர்பு படுத்தி போலியான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வருகின்றனர். எமது கட்சியின் தலைவர் உட்பட நாம் தெளிவாக கூறுகின்றோம். அதனை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம். 

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம் கட்டாயம் கிடைக்க வேண்டும். என்பதே எமது நிலைப்பாடும். இதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். எனவே எமது கட்சியின் தலைவர் மக்களுக்கு இதனை தெளிவுபடுத்தி வருகின்றார். 

எமது கட்சியின்  தலைவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்குடன் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் இவற்றை நாம் கண்டிக்கின்றோம். 

கடந்த காலங்களில் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளாக வந்தவர் தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக வேண்டுமென்றே இந்த குண்டுத் தாக்குதல் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றனர். 

மாவட்ட மக்கள் இம்முறை மிகத் தெளிவாக இருக்கின்றனர் இந்த போலி தேசியவாதிகளை நிச்சயம் தோற்கடிக்கப்படுவார். இந்த தேர்தல்களில் மக்கள் இம்முறை அரசியல் அதிகாரங்களை எமக்கு வழங்குவார்கள் என 100 வீத நம்பிக்கை எமக்கு உள்ளது. என அவர் இன்போது தெரிவித்தார்.   



 

SHARE

Author: verified_user

0 Comments: