அருளானந்தன் அவர்களின் மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு பேரிழப்பு -நாரா.டி.அருண்காந்த்.
"சிந்தனைச் செல்வர் அமரர் சின்னத்துரை (லீலா குரூப்) அவர்களின் மகனும் விடைகொடிச்செல்வர் தனபாலாவின் சகோதரருமான சமய,சமூக சேவகர் பிரபல வர்த்தகர் அருளானந்தன் அவர்களின் இழப்பானது இலங்கை வாழ் இந்துக்களுக்கு மாபெரும் பேரிழப்பாகும்."
இவ்வாறு S. T . S அருளானந்தன் அவர்களின் மறைவையொட்டி விடுத்துள்ள
இரங்கல் செய்தியில் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் அவர்கள்
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுளளதாவது "அருளானந்தன் அவர்களின் மறைவு எமக்கு பெரும்
மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.கொழும்பு கப்பிதாவத்தை கதிர்காம யாத்திரை சபையின் தலைவராகவும்
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவராகவும் ,கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலய நிர்வாகக்
குழு அங்கத்தவராகவும் விளங்கியவர். இவர் தமது முழு வாழ்வையும் இந்து அறநெறி மாணவர்களுக்கு
பாரிய சேவைகளைச் செய்துள்ளதுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களின் நல்வாழ்வுக்காக
தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தவர். ஆன்மீகம்,பண்பாடு,தமிழர் மரபுரிமை ஆகிய தளங்களில் தமது சேவையை நல்கிய அருளானந்தன் அவர்களின் அவர்கள் இந்து பௌத்த நல்லிணக்கச் சபைகளின் தலைவராக இருந்து இனங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்த தன்னை அர்ப்பணித்தவர்.அன்னாரது மறைவு இலங்கை வாழ் இந்துக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.அன்னாரது ஆத்மா சாந்தியடைய இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் பிராத்தனைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றோம்"என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment