8 Sept 2024

ஏழை மீனவ சமுதாயத்தினருக்கு ஏற்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே

SHARE
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏழை மீனவ சமுதாயத்தினருக்கு ஏற்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே.

இந்த நாட்டில் பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றபோதுஇ எவருமே நாட்டைப் பொறுப்பெடுக்காமல் மக்களைப் புறக்கணித்தபோதுஇ தற்துணிவோடு மக்களின் சுமைகளைப் பொறுப்பெடுத்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவே என வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மஞ்சந்தொடுவாய் அல்-அக்ஷா மீனவர் சங்கத்தின் அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மீனவர் சங்கத் தலைவர் ரீ.எல். பஷீர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மீனவர்கள் தாம் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்திலும் கொரோனா ஆட் கொல்லி வைரஸ் தொற்றுக் காலத்திலும் தற்போதைய சூழ்நிலையிலும் தாங்கள் எதிர்கொண்டு பொருளாதாரக் கஷ்டங்களை ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆளுநர், நஸீர் அஹமட், இனவாதம்  இல்லாத ஒரு தலைவரால்தான் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். இந்த நாட்டை முழுமையாகச்  சீரழித்ததே இனவாதம்தான். தற்போது தாம் இனவாதிகளில்லை என்று காட்டிக் கொண்டு முன்னுக்கு வரும் தலைவர்கள் புளியம்பழத்தில் சீனியைப் பூசிக் கொண்டு வருகின்றார்கள். இவர்கள் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்று  நம்பி மக்கள் ஏமார்ந்து விடக் கூடாது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்ஹவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் ஒரு போதும் அச்சத்துடன் வாழ்ந்ததில்லை. இனியும் அவரது தலைமையின் கீழான ஆட்சியில் அச்சம் பீதி இனவாதம் இன்றி வாழலாம். ஏழை மீனவ சமுதாயத்தினருக்கு ஏற்ற தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே” என்றார்.






 

SHARE

Author: verified_user

0 Comments: