விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் காந்திபுரம் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வொன்று சனிக்கிழமை(07.09.2024) நடைபெற்றது.
அப்பகுதி விவசாய போதனாசிரியர் பி.சகாப்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மா மர செய்கையில் கத்தரித்தலைப் பழக்கப்படுத்தல், பசளையிடல், நோய் பீடை பராமரிப்பு, ரொகிங் தெளி கருவி பாவனை, மாங்கன்று நடுகை, மண் பரிசோதனை, நிலக்கடலை விதையிடல் கருவியால் நடுகை செய்தல், ஜிப்சம் பாவனை, போன்ற செயன்முறை விளக்கங்களுடனான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் இதன்போது நடைபெற்றது.
மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் மு.பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், உதவி விவசாய பணிப்பாளர் நித்தியா நவருபன் பிரதேச செயலக விவசாய பிரிவு உத்தியோகத்தர், பாடவிதான உத்தியோகத்தர், மற்றும் வலய உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment