8 Sept 2024

சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை குழுக் கூட்டம்.

SHARE

சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை குழுக் கூட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை மத்திய குழு கூட்டம், அதன் செயலாளர் எம்.எஸ்.எம்.  அசாருதீன் தலைமையில் சனிக்கிழமை (07) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எம்.ஐ.எம். மன்சூர் கலந்து சிறப்பித்தார். குறித்த கூட்டத்தில் பொதுக் கூட்டங்கள், வட்டார ரீதியான கருத்தரங்குகள், வட்டார ரீதியான காரியாலங்கள் திறத்தல், வட்டார ரீதியான வீடு வீடாகச் செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற பல விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதிர், உயர்பீட உறுப்பினர்களான ஏ.எம்.ஏ.அஸீஸ், ஏ.எம்.தௌபீக், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி யூ. கே சலீம், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம், கலாநிதி எஸ்.எல்.றியாஸ், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளரும் தைக்காப் பள்ளி வட்டார வேட்பாளருமான அர்ஷத் இஸ்மாயில், வீரமுனை வட்டார வேட்பாளர் எம்.எல்.சுபைதீன்,எம்.றியாஸ் மற்றும் கிளை தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: