தமிழ் மக்களுடைய அதிகாரப்பரவாலக்கல் பிரச்சனைக்கு எங்களுடைய தேர்தல் கட்டமைப்பிலே முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது – கணேசமூர்த்தி.
என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளர்.
ஐக்கிய மக்கள் கட்சியின் காரியாலயம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக் கிழமை(09.09.2024) மாலை அக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இலங்கைத்திருநாடு இன்று புதியதொரு மாற்றத்தை நோக்கிச் செல்லவிருக்கின்றது. இந்த மாற்றத்தின் ஆணிவேராக நாட்டின் ஜனாதிபதியை இலங்கைவாழ் மக்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப் போகின்றார்கள். மத மொழி வேறுபாடின்றி, மூவின மக்களும் ஒரே குடையின்கீழ் இந்த தேர்தலிலே வெற்றி வெற்றிகொள்ள வேண்டும் என்று மிகவும் கடடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டினுடைய தேசியப் பிரச்சனையாகக் காணப்படுகின்ற தமிழ் மக்களுடைய அதிகாரப் பரவாலக்கல் பிரச்சனைக்கு எங்களுடைய தேர்தல் கட்டமைப்பிலே முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. 70 வருடமாக நாங்கள் சுதந்திரத்திற்காகவும், சுயாட்சிக்காகவும், தமிழ் மக்களின் விடிவுக்காக போராடி வந்திருக்கின்றோம். இந்த போராட்டத்தின் விளைவாகத்தான் தமிழர்களுடைய அதிகாரப் பரவலாக்கலை நாங்கள் 1957 ஆம் ஆண்டு மாகாணசபை மூலம் பெற்றிருந்தோம். ஆனாலும் மாகாண சபை முறையிலே பல விடையங்கள் நிறைவேற்றப்படாமலிருக்கின்றன. குறிப்பாக சர்ச்சைக்குரிய விடையமாக இருக்கின்ற பொலிஸ், காணி அதிகாரம், பல்கலைக் கழக உயர் கல்வி விடையம் தொடர்பிரான பல்வேறு முக்கிய விடையங்கள், நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்கள் தமிழரசுக் கட்சியுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது தான் பதவியேற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 13வது சரத்தை முற்று முழுதாக அமுல்படுத்துவதாக தெட்டத்தெழிவாகத் தெரிவித்துள்ளார். இதனை வாய்ப்பேச்சில் அல்லாமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாட்டை அவர் கொண்டுள்ளார். ஏனைய தலைவர்களைப் போன்று அவர் இரட்டை வேடம் பூணும் தலைவர் அல்ல அவர் சொல்வதைப் செய்பவர் ஆகவே தமிழ் மக்களுக்கு இது ஒரு விடிவான காலமாகும்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி தங்களுடைய நிலைப்பாட்டை அறிவித்திருக்கின்றது. அதனடிப்படையில் வடகிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு ஆதரவாகத் தொழிற்பட வேண்டும் எனவும், இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், இத்தேர்தலிலே போட்டியிடுகின்ற பொதுவேட்பாளர் தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது ஒரு நல்ல சமிக்ஞையாக நாங்கள் பார்க்கின்றோம்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், சகவாழ்வைவும், சகோதரத்துவத்தையும், நிலைநாட்டி இந்த நாட்டிலே நேர்வையான நீதியாக அரசாங்கம் ஒன்றை சஜித் பிரேமதாஸ அவர்களின் தலைமையிலே நிறுவுவதற்கு இலங்கை மக்கள் அனைவரும் திடசங்கற்பம் பூண்டிருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்கள் 100 வீதம் வாக்களிப்பார்கள் என நம்புகின்றேன். பட்டிருப்பு தொகுதி மக்கள் 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது அவருக்கு 96 சதவீதம் வாக்களித்திருந்தார்கள் இது அப்போது இலங்கைளிலேயே அதிகளவு வாக்குக்களை வழங்கிய தொகுதி பட்டிருப்புத் தொகுதியாகும். எனவே அதனைவிடவும் இம்முறை 98 தொடக்கம் 99 சதவிதம் பட்டிருப்புத் தொகுதி வாக்களிக்கும் என நாம் நம்புகின்றேன்.
இந்த தேர்தலிலே மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள் நாட்டு மக்களை துன்பத்திலேயே வீழ்த்திய இந்த அரசை தூக்கி எறிவதற்கு இலங்கை மக்கள் அனைவரும், திடசங்கற்பம் பூணுகின்றார்கள். எனவே 21 ஆம் திகதி நாட்டிற்கு சுபீட்சமான எதிர்காலம் ஒன்றைப் பார்க்கப்போகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment