மறைந்த சம்மந்தன் ஐயாவின் ஆசையை நிறைவேற்ற சஜித் பிமேதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டும். – மட்டு.அமைப்பாளர் சந்திரகுமார்.
மறைந்த சம்மந்தன் ஐயா உயிரோடு இருக்கும்போது சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்க வேண்டும் என பாடுபட்டவர். அது நடைபெறாமல் போய்விட்டது. அது நிச்சயமாக தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மறைந்த சம்மந்தன் ஐயாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வேண்டி இம்முறை ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் காரியாலயம் ஒன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக் கிழமை(09.09.2024) மாலை திறந்து வைக்கப்பட்டடது. இதன்போது முன்னாள் பிரதியமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்துதார். இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மாற்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளிப்படுத்தப்படும். உண்மையான சிவில் நிருவாகம் நடைபெறுவதற்காக மட்டக்களப்பு மக்களும் அந்த மாற்றத்திற்காக ஒன்றிணைய வேண்டும்.
கடந்த அரசாங்கத்தில் சரியான நிருவாகம் நடைபெறவில்லை. ஜனாதிபதி வேட்பாளர் இன மத வேறுபாடுகள் இன்றி சகலரையும் மத்தித்து நடந்து கொள்ளக்கூடிய ஒருவராக காணப்படுகிக்றார். தமிழ் மக்களை அவர் அதிகம் நேசிக்கின்றார். அவரிடம் சரியான திட்டத்தை வழங்கினால் தமிழ் மக்கள் முறையாக பயணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில்தான் நான் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளேன். ஏனைய அரசியல் தலைவர்களைப் போல் ஏமாற்றாமல் அது நடைபெறும் நிட்சயமாக நடைபெறும் என நினைக்கின்றேன்.
இலங்கைத் தமிழரசுக்
கட்சிதான் தமிழ்
மக்களின் ஏக
பிரதிநிதிகள் என
ஏற்றுக் கொண்ட
கட்சி. அந்த கட்சியே
சஜித் பிரேமதாஸவை ஆதரித்துள்ளார்கள். மறைந்த சம்மந்தன்
ஐயா உயிரோடு இருக்கும்போது சஜித் பிரேமதாஸவை
ஜனாதிபதியாக்க வேண்டும்
என பாடுபட்டவர். அது
நடைபெறாமல் போய்விட்டது.
அது நிட்சயமாக தமிழ்
மக்களின் ஏக
பிரதிநிதியாக ஏற்றுக்
கொள்ளப்பட்ட ஆசையை
நிறைவேற்றுவதற்காக வேண்டி
இம்முறை ஜனாதிபதியாக
சஜித் பிரேமதாஸவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழ் மக்களைக் குழப்புவதற்காக வேண்டி பல அரசியல் கட்சிகள் பிரிக்க நினைக்கின்றார்கள். அவ்வாறான பொய்யான தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றனர். அதனை மக்கள் பொருட்படுத்தாமல் மக்களுக்கு ஏற்ற கட்சியில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவை மக்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனமும் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment