ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்களிப்பு முடிந்த நிலையில் சனிக்கிழமை இரவு முதல் அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ள ஊரடங்குச்சட்டம் ஞாயிற்றுக் கிழமை வரையில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நகர்ப்பகுதி முற்றாக முடங்கியுள்ளது. களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரதான வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தை, வங்கிகள், நகைக்கடைகள், உள்ளிட்ட ஏனைய வியாபார நிலையங்கள் எதுவும் இயங்கவில்லை.
எனினும் வைத்தியசாலை நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் இந்நிலையில் ஒருசில சிற்றுண்டிச்சாலைகளும், மருந்தகங்களும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என்பன திறந்து சேவையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.
அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் ஏதுவும் இடம்பெறாத நிலையில் மக்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உளுர் வர்த்தக நிலையங்களை நாடிச் செல்வதையும் காணமுடிகின்றது. இதனால் வழக்கமான செயற்பாட்டிலிருந்து களுவாஞ்சிகுடி நகரம் முற்றாக முடங்கியுள்ளது.
0 Comments:
Post a Comment