5 Aug 2024

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மட்டு.மாவட்டத்தில் அரச உத்தியோகஸ்த்தரிகளிடையே இடமாற்றம் ஜனாதிபதியின் கவனத்திற்கு.

SHARE
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மட்டு.மாவட்டத்தில் அரச உத்தியோகஸ்த்தரிகளிடையே இடமாற்றம் ஜனாதிபதியின் கவனத்திற்கு.

சனிக்கிழமை (03.08.2024) மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐனாதிபதி, மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் வைத்து சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது மாவட்டத்தின் பல விடயங்கள் தொடர்பில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில்  தேர்தல் அறிவித்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவை புரியும் சுமார் 34 சமூர்த்தி ஊழியர்களின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், என தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.

இவ்விடையத்தை கேட்டறிந்த ஐனாதிபதி  இடமாற்றம் சம்பந்தமாக ஆராயும்படி கிழக்கு மாகாண ஆளுநருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் உந்துதல் இடம்பெறும் இவ்வாறான இடமாற்றங்களை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாக வினோராஜ் இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது  பாராளுமன்ற உறுப்பினர்களான .கலையரசன், இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: