5 Aug 2024

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்.

SHARE

மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பட்டிருப்புக் கல்வி வலயம் முதலிடம்.

அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில்  22 இடங்களைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதில் 08 முதலாம் இடங்களும் 08 இரண்டாம் இடங்களும் 06 மூன்றாம் இடங்களும் அடங்குகின்றன. இதில் குறிப்பாக மட்.பட்.மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவர்கள் 10 இடங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் 10 இடங்களையும் திருகோணமலை கல்வி வலயம் 9 இடங்களையும் பெற்று முறையே 2 ஆம், 3 ஆம் இடங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன. இவ்வெற்றிக்காக பங்காற்றிய மாணவர்கள், சமூக விஞ்ஞான ஆசிரியர்கள், அதிபர்கள்; பட்டிருப்பு கல்வி வலய சமூகவிஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர், வளவாளர்கள் அனைவருக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.




SHARE

Author: verified_user

0 Comments: