இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற திறமையுடைய 100,000 மாணவர்களுக்கும் க.பொ.த உயர்தர மாணவர்கள் 6,000 பேருக்கும் புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைபெறும் மட்டக்களப்பு மாவட்ட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் தலைமையில் செவ்வாய்கிழமை(16.07.2024) இடம்பெற்றது.
மாவட்ட பிரதான நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சாகிர் மௌலானா மற்றும் அதாவுல்லா, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கல்வி திணைக்கள உயர் அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள், கிழக்கு மாகாண சபையின் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலைய கல்வி பணிப்பாளர்கள் பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள், என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி சகல ஆளுநர்களுக்கும் அறிவித்தல் வழங்கியுள்ளார் நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் இருப்பதால் அவர்களது வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் படி தெரிவித்துள்ளார் இந்த நாட்டை வழிநடத்த உள்ள அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதோடு. அனைத்து வேலைத் திட்டங்களையும் முன்னின்று செய்து கொடுக்கும்படி உத்தரவு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி இந்த ஊக்குவிப்பு தொகை அடுத்த வருடம் இரண்டு மடங்காக வழங்க உள்ளார். அதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை கல்விக்காக உங்களது கல்வி மூலம் தான் இந்த நாட்டிற்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உள்ளது.
ஜனாதிபதியும் உங்களைப் போன்று ஒரு நாள் மாணவராக இருந்தவர் தான் கல்வி அமைச்சரின் பணிகளும் மிகவும் பாராட்டத்தக்கது எதிர்காலத்தில் ஜனாதிபதி மாணவர்களுக்கு இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்க உள்ளார்.
என இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவித்தார்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment