மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலய மட்ட சதுரங்க விளையாட்டுப் போட்டி குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு வலய ஆசிரிய ஆலோசகரும் சதுரங்க விளையாட்டு இணைப்பாளருமான ஜெயகரன் ஒழுங்கமைப்பில் வலயக் கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் தலைமையில் இப்போட்டிகள் ஆரம்பமானது.
இப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து விஷேட தேவையுடைய மாணவர்கள் அடங்கலாக 400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சஜீவன் மற்றும் சதுரங்க பயிற்றுவிப்பாளர்கள் லைக்கா அமைப்பின் பிரதிநிதிகள், கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலய தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment