8 Jul 2024

நானும் ஓரு தமிழ் தேசியத்தின் ஒருவர்தான் தமிழர்கள் மத்தியில் பேசிய இஸ்லாமிய மதகுரு

SHARE

நானும் ஓரு தமிழ் தேசியத்தின் ஒருவர்தான் தமிழர்கள் மத்தியில் பேசிய இஸ்லாமிய மதகுரு.

அனைவரும் பேசும்போது தமிழ் தேசியம், தமிழ் தேசியம் என்று பேசினீர்கள் நான் முஸ்லிம் மதத் தலைவராக இருந்தாலும் நானும் ஓரு தமிழ் தேசியத்தின் ஒருவர்தான் அதனையிட்டு நான் சந்தோசமடைகின்றேன்.

என சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த மௌலவி அஸ்வர் மர்சூக்  தெரிவித்துள்ளார்.

அமரர் நாடாளுமன்ற உறுப்பினர்  இராஜவரோதயம் சம்மந்தன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை மாலை (06.07.20204) இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ்  தலைமையில் களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த இஸ்லாமிய மதகுருவும் அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது அவர் நினைவேந்தல் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்

முஸ்லிம் சமூகத்தில் ஒரு முஸ்லிம் அல்லாதவனின் காணி இருந்தாலும் அதனை கொடுத்துவிடு என நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். உரிமையை எப்பொழுதும் யாராக இருந்தாலும் தமது மனங்களில் கொடுக்கக்கூடாது என்ற சிந்தனை இருக்கவே கூடாது என நபிகள் கூறியுள்ளார். கல்முனை பிரதேச செயலகமாக இருந்தாலும், கொடுக்கக்கூடாது என்ற சிந்தனை வரவே கூடாது என நான் பௌத்த பிக்குவிடமும் கூறினேன். இந்த நாட்டிவே சில கயவர்களின் மனங்களில் பதிந்ததுதான் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம். இந்நிலையில்தான் தனக்கென பெரிய பதவிகள் தேடி வந்தபோது அதனைப் பெறாமல் சென்றுள்ளார் சம்மந்தன் ஐயா. அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கின்றேன்.

நாட்டிவே நான்கு மதங்களை வைத்திருக்கின்ற பல்லின சமூகம் நாம். ஆனால் நாம் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கின்றோம். சம்மந்தன் ஐயா இறந்து விட்டார் என என்னுடைய மூத்த மௌலவி ஒருவர் மிகவும் கவலையோடு என்னிடம் தெரிவித்தார். சம்மந்தன் ஐயா அவர்கள் முஸ்லிம் விவகாரங்கள் பற்றிப் பேசுகின்றபோது மிகவும் அமைதியாக முஸ்லிம் சமூகம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அளவிற்கு மரியதை நிறைந்த முழுமையான தலைமைதான் அவர்.

இன்னொருத்தரின் உரிமைக்காக பாடுபட்டு இறுதியில் உலகத்தை விட்டுப் பிரிகின்றாரோ அவர்தான் மிக மிக சிறந்தவர். என நபிகள் கூறுகின்றார். அவ்வாறான ஒரு மகாந்தான் இரா.சம்மந்தன் ஐயா.

 1933 ஆம் ஆண்டு சம்மந்தன் ஐயா பிறந்திருந்தார். அதே 1933 ஆண்டு சம்மந்தன் ஐயாவின் முகபாவனையையொட்டிய முஸ்லிம் ஒருவர்தான் லிபியாவிலே தமது நிலத்திற்காக போராடியவர்தான் உமர் முவ்தார் ஆவர். அவருக்கு பல பரிசில்களைக் கொடுத்த போதும் அதனை ஏற்காமல் எனது மக்களுடைய நிலத்திற்காக போராடுகின்றேன் என தெரிவித்திருந்தார். அபோல் மக்களின் பல ஏக்கர் காணியை இராணுவத்தினரிடமிருந்து மீளப் பெற்றுக் கொடுத்த தலைமைதான் சம்மந்தன் ஐயா.

இன்றுவரையில் சம்மந்தன் ஐயா அவர்களும் உமர் முவ்தாரைப் போல் பதவிகளையோ, பரிசில்களையோ பெறவில்லை. அது நல்லாட்சி அரசாங்கத்தில்கூட பதவிகளுக்கு சம்மந்தன் ஐயாவிற்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. ஒரு சில முஸ்லிம் தலைமைகள்கூட தெரிவித்திருந்தார்கள் ஐயா நீங்கள் பதவிகளை எடுக்கலாம்தானே என்று. அப்போதும்கூட எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்து நல்லதை நல்லது என்றே பேசினார். சம்மந்தன் ஐயா அவர்கள் ஒரு இடத்திலே மரணித்தார். ஆனால் அவருக்காக பல இடங்களிலே தற்போது அஞ்சலி செய்யப்படுகின்றன. இந்நிகழ்வில் நானும் கலந்து கொண்டு பேசியதில் பாக்கியம் பெற்றுள்ளேன் அவர் விட்டுச் சென்று அடிச் சுவடுகளை நாங்கள் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது குறித்த மௌலவியின் பேச்சைக் கேட்டிருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினர்.

 

SHARE

Author: verified_user

0 Comments: