17 Jun 2024

பொருளாதார தீதியில் நாம் வளற்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில் செய்யும் மக்கள் வளற்சியடைய வேண்டும் - கிழக்கு ஆளுனர்.

SHARE

பொருளாதார தீதியில் நாம் வளற்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில் செய்யும் மக்கள் வளற்சியடைய வேண்டும் - கிழக்கு ஆளுனர்.

பொருளாதார தீதியில் நாம் வளற்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில் செய்யும் மக்கள் இந்த நாட்டில் வளற்சியடைய வேண்டும். அப்போதுதான் இலங்கை ஒரு வல்லரசு நாடாக மாறும். என கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் உளுர் மேம்பாட்டு ஆதரவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் புதிதாக 5210000.00 நிதி ஒதுக்கீட்டில் நிருமாணிக்கப்பட்ட மூன்று கடைத்தொகுதிகளைத் திறந்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(16.06.2024) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

இந்த அரசாங்கம் நாட்டை முன்னெடுக்கும்போது நாட்டை இழுத்து மூடும் நிலமையில்தான் இருந்தது. மருந்து இல்லை, பெற்றோல் இல்லை, சாப்பாடு, மா, அரிசி, எதுவும் இல்லாத நிலமையிலேதான் இருந்தது. 

இந்நிலையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டை முன்னெடுத்து, நாட்டில் வாழலாம் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் வழங்கினார். ஆனாலும் ஒரு நாளில் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடையாது. படிப்படியாகத்தான் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஒரே நேரத்தில் முழுமையான தீர்வு வராது. 

கடந்த ஒன்றரை வருட காலத்தில் ஜனாதிபதி அவர்கள்  இந்த நாட்டை மீண்டும் வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் மக்கள் அதிகளவு வந்து செல்லும் இடங்களை நாம் அதிகளவு கருத்திற் கொண்டு, நான் சுமார் 12 புதிய பொதுச் சந்தைக் கட்டடங்களை திறந்து வைத்துள்ளேன்.  

பொருளாதார தீதியில் நாம் வளற்சியடைய வேண்டுமாக இருந்தால், அடிப்படைத் தொழில் செய்யும் மக்கள் இந்த நாட்டில் வளற்சியடைய வேண்டும். அப்போதுதான் இலங்கை ஒரு வல்லரசு நாடாக மாறும். 

தற்போது களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் திறந்து வைக்கப்பட்டுள் 3 கடைத் தொகுதிகளுக்கும் இராஜாங்க அமைச்சர்களான சிவ.சந்திரகாந்தன், மற்றும், .வியாழேந்திரன் ஆகியோர் நிதியைப் பெற்றுக் கொடுத்திருந்தார்கள். அடுத்த கட்டமாக களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையை மேலும் அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்நெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்









SHARE

Author: verified_user

0 Comments: