இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் (IESL) கிழக்கு மாகாணக் கிளையின் 27-வது வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 14.02.2026 அன்று சனிக்கிழமை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணக் கிளையின் தலைவர் பொறியியலாளர் S. கலாதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிராந்தியத்தின் பொறியியல் துறைசார் வளர்ச்சிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் பொறியியலாளர் பிரபோத ஜினசேன, IESL இன் சிரேஷ்ட உபதலைவர் பொறியியலாளர் சமந்த குணவர்தன மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் (எந்திரி) S.M. ஜூனைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தின் முக்கிய அங்கமாக, எதிர்வரும் காலப்பகுதிக்கான மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுக்குழு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக பொறியியலாளர் M.A. வாதுலன், செயலாளராக பொறியியலாளர் R. வள்ளுவன், பொருளாளாளராக பொறியியலாளர் A. பிருந்தன், மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக பொறியியலாளர்கள் G. அருண், P.அச்சுதன், N. புவிராஜினி, Y. ரஷாலினி மற்றும் R. தயானகாந்த் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய நிருவாகக் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொறியியல் தரம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார்கள் என இக்கூட்டத்தில் உறுதி எடுத்துக் கொண்டனர்.


0 Comments:
Post a Comment