அரசியல் வியாபாரத்திற்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் மக்களின் துயரத்தைப் பாவிக்கக்கூடாது - இராஜாங்க அமைச்சர் வியாழேந்தரன்.
அரசியல் வியாபாரத்திற்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் மக்களின் துயரத்தைப் பாவிக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் நிளைவு தினைத்தை அனுஸ்ட்டிப்பதற்கு சகல உரிமையும் உள்ளது.
என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இராஜராங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அப்பகுதி விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(17.05.2024) நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு விவசாய உபகரணங்களை வழங்கி வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும தெரிவிக்கையில்.....
முள்ளிவாய்க்காலில் 2009 இல் கொத்துக் குண்டுகளுக்கு அகப்பட்டு எமது சமூகம் அழிந்தபோது கணவன், மனைவி, பிள்ளைகள், மற்றும் உடமைகள் அனைத்தையும் இழந்து, மக்கள் சிதறி குடிப்பதற்கு கஞ்சிகூட இல்லாமல் மக்கள் எதிர்கொண்ட மாதம்மான் இந்த மே மாதம். அந்த சம்பவத்தை மக்கள் நினைவுகூரத்தான் வேண்டும் அதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் சில அரசியல்வாதிகள் பாதாகைகளைக் கட்டிக் கொண்டு, அவர்களின் கட்சியின் பெயர்களையும் பொறித்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஸ்ட்டிப்பதாகத் தெரிவிக்கின்றார்கள்.
2009 ஆம் ஆண்டு வடகிழக்கில் 22 பாராளுமன்ற உறுப்பிர்கள் இருந்தார்கள் அவர்கள் எங்கே, இதனை ஊடகங்களும் கேள்வி எழுப்ப வேண்டும்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். மக்கள் கொத்துக் குண்டுகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வரும்போது தேசியம் பேசியவர்கள் ஒருத்தரும் நாட்டில் இல்லை. இதனை ஊகங்களும் வெளிக் கொண்டு வரவேண்டும்;. தற்போது பார்த்தால் பதாகைகளைக் கட்டிக் கொண்டு கஞ்சி கொடுக்கின்றார்கள்.
அரசியல் வியாபாரத்திற்காகவும், அரசியல் இலாபத்திற்காகவும் மக்களின் துயரத்தைப் பாவிக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் முள்ளிவாய்க்கால் நிளைவு தினைத்தை அனுஸ்ட்டிப்பதற்கு சகல உரிமையும் உள்ளது.
அதனை யாரும் தடுக்க முடியாது. அந்த மக்கள் அந்த சம்பவங்களை நினைவு கூருவதற்கு சகல உரிமையும் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தெரிவித்துள்ளார். அதனை எந்த பிரிவினரும் தடுக்கக்கூடாது அதைத்தான் நாங்களும் தெழிவாகச் சொல்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
.jpeg)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment