19 May 2024

பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேசமும், மனித உரிமை ஆணைக்குழுவும் தலையீடு செய்ய வேண்டும்.

SHARE

பொலிசாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேசமும், மனித உரிமை ஆணைக்குழுவும் தலையீடு செய்ய வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்திய பொலிசாரின் செலை நாம் ஒரு சிவில் சமூகமாக வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்காலத்திலே அப்பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும், ஒழுக்காற்று நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு, இவ்வாறான அராஜகம் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். சர்வதேசமும், மனித உரிமை ஆணைக்குழுவும் இதில் தலையீடு செய்ய வேண்டும். என மடக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

பல்கலைக் கழக மாணர்கள் நினைவேந்தலுக்காக வைத்திருந்த பூக்கள், மற்றும் கஞ்சிப்பானை அடுப்பு அனைத்தையும் பொலிசார், காலால் தட்டிவிட்டு அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். நாட்டிலே சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது என சொல்லப்படுகின்றது. ஆனால் அந்த சட்ட ஒழுங்கை மீறி அதனை ஒரு வன்முறையாகப் பயன்படுத்துவது, பொலிசாராகவே இருக்கின்றார்கள்.

ஏனெனில் நினைவேந்தல் செய்வதற்குத் தடை இல்லை என சொல்லப்படுகின்றது, நினைவேந்தல்களை தங்களது சமயத்தினதும், கலாசாரத்தினதும், முறைமையின்படி, மலர்தூவி, எவ்வண்ணமாக சமயக் கடமைகள் இருக்கின்றதோ அவ்வண்ணமாகவே இந்நிகழ்வுகளைச் செய்யலாம் என சொல்லப்படுகின்றது.

எமது நாட்டிலே 15 வருடங்களுக்கு முன்னதாக எமது மக்கள் தங்களது பசியைத் தீர்ப்பதற் இரத்தக் கறைகளோடு கச்சை ஆகாரமாக அருந்தி தமது பசியைப் போக்கியிருந்தர்கள். அந்த நினைவை நாங்கள் மக்களுக்குள்ளேயே எடுத்துச் சென்று அதனை நினைவு கூருகின்ற வேளையிலே, சாதாரணமாக கஞ்சைப் பகிர்ந்து கொள்ளுகின்ற அளவிற்கு, ஸ்ரீலங்கா பேரினவாத அரசு செயற்படுகின்றது. குறிப்பாக இச்செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்றது. சட்ட ஒழங்கை மீறி செயற்படுகின்றார்கள். சட்ட ஒழுங்கையும், நீதித்துறையையும் மிகவும் கொச்சைப்படுத்தும் அளவிற்கு பொலிசார் செயற்படுகின்றார்கள். சட்ட ஒழுங்குகளை எவ்வண்ணமாக தங்களுக்கு சாதகமாக மாற்றவேண்டுமோ அவ்வண்ணமாக மாற்றி செயற்படுகின்றார்கள்.

எனவே இந்த நாளிலே பல்கலைக் கழக மாணவர்களுக்கு நடைபெற்ற சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மாறாக இது பல்கலைக் கழக மாணவர்களுக்கு நடைபெற்ற சம்பவம் இல்லை எமது தமிழினத்திற்கு நடைபெற்ற ஓர் சம்பவமாகும். எனவே நாம் ஒரு சிவில் சமூகமாக இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, எதிர்காலத்திலே பொலிசாருக்கு சட்ட நடவடிக்கைகளும், ஒழுக்காற்று நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு, இவ்வாறான அராஜகம் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். சர்வதேசமும், மனித உரிமை ஆணைக்குழுவும் இதில் தலையீடு செய்ய வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.  

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட் தந்தை கந்தைய ஜெகதாஸ் அடிகளார்.   சிவில் அமைப்பின் பிரதிநிதிகளான அருட் தந்தையர்களான .ஜீவன் அடிகளார், ஜோசப் மேரி அடிகளார், மற்றும் ராஜனி ஆகியோரும் இணைந்திருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: