ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்புத் தொகுதிக்குரிய நிருவாகத்தினருக்குரிய நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குரிய நிருவாகத்தினருக்குரிய நியமனக்கடிதங்களை அக்கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய பிரதான அமைப்பாளர் த.தயாநந்தன் அவர்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை(12.05.2024) உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய கிராங்குளத்தில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது அக்கட்சிகுரிய மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான இளைஞர் அணித்தலைவர், முகாமையாளர், பிரதான அமைப்பாளரின் செயலாளர், ஊடக இணைப்பாளர், நிருவாக செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவினால் கையொப்பம் இடப்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கட்சியின் தலைவர் மிகவிரையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். இலங்கையில் எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாத வேலையை பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் எமது கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்கள் செய்து வருகின்றார். வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியின் தலைவர்தான் நிட்சயமாக ஜனாதிபதியாகத தேர்வு செய்யப்படுவார். என மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய பிரதான அமைப்பாளர் த.தயாநந்தன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment