12 May 2024

மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம்.

SHARE

மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடிக்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை(12.05.2024) மேற்கொண்டனர்.

தேசிய நல்லிணக்க மன்றத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் ஆர்.ஹேரத்தினின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய நல்லிணக்க மன்றத்தின் ஊடக பேச்சாளர் சுமேதவராவேவ தலைமையில்  களுவாஞ்சிகுடி பிளஸ் கல்லூரியிஸ் அம்மாணவர்களுக்குரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அகில இலங்கை ரீதியாக இன, மத, வேறுபாடு இன்றி   சகோதரத்துவத்தை முன்னிறுத்தி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக இக்களவிஜயம் இடம்பெற்று வருகின்றது.

சிங்கள பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அனுராதபுரத்தை சேர்த்த மாணவ மாணவிகள்  தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு வருகை மேற்கொண்டு இப்பிரதேச தமிழ் மாணவர்களுடன் கலந்துரையாடி நற்புறவை ஏற்படுத்திக் கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் ஆற்றுகை செய்யப்பட்டன. இந்நிகழ்வினை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கினைப்பாளர் திருமதி பிரேமிலா கோபிநாத், ஆசிரியர் நேஷாந் பனான்டோ ஆகியோர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன் போது மட்டக்களப்பை சேர்ந்தவர்களை அனுதாதபுரத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, வருகை தந்திருந்த சிங்கள மாணவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இன நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மாணவர்களிடையே  நல்லுறவை மேம்படுத்தும் முகமாக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நாடு பூராகவும் இவ்வாறான கள விஜயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: