19 May 2024

சாம் தம்பிமுத்து, கலா மாணிக்கம் படுகொலை செய்யப்பட்ட 34 நினைவேந்தல் நிகழ்வு.

SHARE

சாம் தம்பிமுத்து, கலா மாணிக்கம் படுகொலை செய்யப்பட்ட 34 நினைவேந்தல் நிகழ்வு.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்துவின் பெற்றோர்களாகிய சாம் தம்பிமுத்து, கலாமாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு 34 வருடங்களின் பின் இடம்பெற்ற முதலாவது நினைவேந்தல் நிகழ்வு. மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண்மொழிவர்மன் தம்பிமுத்துவின் பெற்றோர்களாகிய சாம் தம்பிமுத்து மற்றும் கலாமாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்ன 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை(18.05.2024) மாலை வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது.

அவர்கள் 34 வருடங்களுக்கு முன்பு கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டதன் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு இவர்களது ஏக புத்திரனான தம்பிமுத்துவின் தலைமையில் இடம்பெற்றது.

சாம் தம்பிமுத்து, கலாமாணிக்கம் அவர்களது பெற்றோர்களது திருவுருவப் படத்திற்கு சாம் தம்புமுத்துவின் உறவினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டன.

அதன்பின் கலந்து கொண்ட அரசியல்  பிரதிநிதிகள் உறவினர்கள் நண்பர்கள் பொது மக்களால் சாம் தம்பிமுத்துவின் திரு உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன  அஞ்சலியும் செலுத்தப்பட்டன.

சாம் தம்பிமுத்து அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிகள் சம்பந்தமாகவும் அக்காலக் கட்சிகளின் அரசியல் இருப்பு பற்றியும் இங்கு கலந்து கொண்ட அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் இதன்போது நினைவுரைகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இறால் வளர்ப்பு முறையினை படுவான்கரை பகுதியில் முதல் முறையாக அறிமுகப்படுத்திய பெருமை அவர்களை சாரும்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், சீனிதம்பி யோகேஸ்வரன், பாக்கியச்செவ்லம் அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், இ.பிரசன்னா,  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.




















 

SHARE

Author: verified_user

0 Comments: