4 May 2024

மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர்.

SHARE

மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகிழூர் பகுதிக்கு இன்றயத்தினம் நேரில் விஜயம் செய்து அப்பகுதி மீகவர்களின் குறை நிறைகளைக் கேட்டறித்து கொண்டார்.

சனிக்கிழமை(04.05.2024) மகிழூர்முனை மீனவர் சங்கக் கட்டடத்தில் கடல் மற்றும் நன்நீர் மீனவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது  கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், நக்டா, மற்றம், நாரா நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்போது பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி மீனர்வகள் கடற்றொழில் அமைச்சரிடன் முன்வைத்தனர். சுருக்கு வலைகளைத் தடைசெய்தல், கோட்டைக்கல்லாறு கடற்கரையில் பழுதடைந்துள்ள மீனவர் தங்குமடம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடன் புனரமைப்பு செய்தல், நன்னீர் மீன் வளர்ப்பு பண்ணையில் ஈடுபடுபவர்களுக்கும், ஏனைய மீன் பிடியாளர்களுக்கும் இடையே காணப்படும் பிரச்சனைகள், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில்  மீனவர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இதன்போது  பழுதடைந்துள்ள எதிர்பொருள் நிரப்பு நிலையத்தையும், அதற்குரிய கட்டடமும் புனரமைப்பு செய்து தரப்படும். அதனை நிருவகிப்பதற்குரிய நபர்கள் முன்வரவேண்டும், நன்நீர் மீன் வளர்ப்பாளர்களுக்கும் மீன்பிடியாளர்களுக்குமான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் குழு ஒன்று மிக விரைவில் இப்பகுதிக்கு விஜயம் செய்து அதற்குத் தீர்வு காண்பார்கள். மீண்டும் விரையில் தான் இப்பகுதிக்கு விஜயம் செய்து மீனவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் ஆராய்வேன் என இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.













SHARE

Author: verified_user

0 Comments: