வாக்குகளித்த மக்களை அடிப்படையாக வைத்தே அபிவிருத்தி இடம்பெறுகிறது - சாணக்கியன் எம்.பி
மட்டக்களப்பு மாவட்டத்தினன் பனையறுப்பான் கிராமத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்;தில் சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றுள்ளன. மாறாக தற்போது நகர்புறங்களில் கொங்றீட் வீதிகளுக்கு மேலாக கார்பட் வீதிகள் பொடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பனையறுப்பான் விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டுப் போட்டியின் ஞாயிற்றுக்கிழமை(28.04.2024) மாலை இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவிக்கையில்….
வாக்குகளை மையமாக வைத்துக் கொண்டு சில வேலைத்திட்டங்கள் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்துள்ளன. அமைச்சர்களை உருவாக்க வேண்டும் என மக்கள் வாக்களித்திருந்தார்கள். அதன் நிமிர்த்தம் தற்போது மட்டக்களப்பிலுள்ள வளங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.
இந்த வருடத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன்மூலம் ஏற்படுத்தப்படவுள்ள ஆட்சி மாற்றத்தினூடாக நாம் எதிர்கொள்ளும் துரத்திஸ்ட்டவசமான சம்பவங்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கலாம். அதற்கு சரியான மறையில் மக்கள் எம்முடன் சேர்ந்து பயணிப்பார்கள். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment