1 May 2024

தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்துக்களை எந்த ஒரு வேட்பாளரும் முன் வைக்கவில்லை – கருணாகரம் எம்.பி.

SHARE

தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்துக்களை எந்த ஒரு வேட்பாளரும் முன் வைக்கவில்லைகருணாகரம் எம்.பி.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின்  வாக்குகளை பெற துடிக்கும் இவர்கள் தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்துக்களை எந்த ஒரு வேட்பாளரும் முன் வைக்கவில்லை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் ஞாயிற்றுக்கிழமை மாலை (28.04.2024)மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும்; மட்டு.ஊடக அமையம்  என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உருவாக்கம் பற்றிய தேவை தற்போது வடகிழக்கில் உணரப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் உறுதியான ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் ஒரு பொது வேட்பாளர்  என்ற விடயம் பேசும் பொருளாக மாறி உள்ளது

தற்போதுள்ள ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு விடயம் சம்பந்தமாக எந்த ஒரு தீர்மானத்தையும் இதுவரை எடுப்பதாக இல்லை ஜனாதிபதி தேர்தல்  அண்மையில் இடம்பெற உள்ள போதிலும் எந்த ஒரு வேட்பாளரும் தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்துக்களை முன்வைக்கவில்லை

தமிழ் மக்களது வாக்குகளை பெறதுடிக்கும் வேட்பாளர்கள் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை கூட முற்றாக நிறைவேற்றுவேன் என்று கூறுவதற்கு  எவருமே தயாராக இல்லாத நிலையில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் இவர்களை நம்பி ஏமாந்த வரலாறுகள் உள்ளன. எனவே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் எல்லாரும் ஒற்றுமை  பட்டதைப் போன்று தற்போது ஒரு தேவை எழுந்துள்ளது எனத் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: