21 Apr 2024

ஜனாதிபதி தேர்தலில் இதுவரை பொது வேட்பாளரை களமிறக்கும் தீர்மானமில்லை. தமிழரசுக் கட்சியின் மட்டு.மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவிப்பு.

SHARE

ஜனாதிபதி தேர்தலில் இதுவரை பொது வேட்பாளரை களமிறக்கும் தீர்மானமில்லை. தமிழரசுக் கட்சியின் மட்டு.மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவிப்பு.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேசக் கிளையின் மகளிர் அணி நிருவாகத் தெரிவு சனிக்கிழமை(20.04.2024) மாலை பட்டிப்பளையில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் பிரதேச நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி  நிருவாகம் மற்றும் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி தயாளகுமார் கௌரி மேலும் குறிப்பிடுகையில்…. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரைக்கும்  ஒரு பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் எமது கட்சி இன்னமும் எதுவித தீர்மானமும எடுக்கவில்லை இவ்விடையம் தொடர்பில் எமது கட்சி சார்ந்து வெளிவரும் கருத்துக்களில் எதுவித உண்மைத் தன்மையும் இல்லை.

தமிழரசுக் கட்சியோ, எமது கடசியின் மகளிர் அணியோ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்குரிய எதுவித தீர்மானமும் இதுவரையில் இல்லை என அவர் இதன்போது தெரிவித்தார்.    

 









SHARE

Author: verified_user

0 Comments: