21 Apr 2024

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விசேட நினைவு திருப்பலி.

SHARE

சீயோன் தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது  உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி விசேட நினைவு திருப்பலி.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது  உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் ஞாயிற்றுக்கிழமை(21.04.2024) விசேட நினைவு திருப்பலி பூஜைகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது  உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும்  விசேட திருப்பலி நினைவு பூஜைகள் இடம்பெற்றன

இதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் ஆலய பங்குத்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ்  அருட்தந்தை தலைமையில் நடைபெற்ற இந்த விசேட திருப்பலி பூஜையில் மட்டக்களப்பில் உள்ள பெரும் தொகையான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டிருந்தனர் இந்நிலையில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது

இந்த விசேட வழிபாட்டின் போது ஆலய பங்குத்தந்தையினால்  மிலேச்சத்தனமான தாக்குதலை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குரிய தண்டனையை இறைவன் அவர்களுக்கு வணங்க அனைவரும் ஆண்டவரிடம் வேண்டுகோள்களை வைக்க வேண்டும் எனவும் இனிமேல் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும். இங்கு குறிப்பிட்டார்

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5 வருட நினைவு தினத்தையிட்டு குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்திலும் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2019 ஏப்பிரல் 21 ம் திகதி சீயோன் தேவாலயத்தில் .எஸ்..எஸ். அமைப்பை சேர்ந்த ஸாரான் காசிமின் தலைமையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு சீயோன் தேவாலயத்தில் போதகர் மகேசன் ரொசான் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனை இடம்பெற்றது.

அதேவேளை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தேவாலயம் இதுவரை புனர்நிர்மான செய்யப்படாமல் பூட்டப்பட்டு இருந்துவருகின்ற நிலையில் அங்கு இன்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சென்று மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.









SHARE

Author: verified_user

0 Comments: